Ad Widget

இலங்கையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு உள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம்!!

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு உள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்தது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் இலங்கையில் கறுப்பு பூஞ்சை நோயுடன் சிலர் அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும் இந்த நோய் கொரோனா நோயாளர்கள் மத்தியில் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை என்றும் தற்போது கொரோனா நோயாளர்கள் சிலரும் இந்த நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

கருப்பு பூஞ்சை என்பது சுற்றாடல் சார்ந்த நோயென்பதால், இது குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

முகத்தில் அல்லது உடலில் ஏதேனும் வித்தியாசமான பருக்கள் மற்றும் அடையாளங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதேநேரம் வைத்திய ஆலோசனை இன்றி மருந்துப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளக்கூடாது என்றும் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் இந்த கருப்பு பூஞ்சைத் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் அபாயம் இல்லையெனவும் அவர் கூறினார்.

Related Posts