- Monday
- April 27th, 2026
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் பற்றிய விபரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார...
மன்னாரில் 14 வயது சிறுவன் தற்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் 4 பேரை கைது செய்து, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர் இதன்போது, சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட நீதிபதி, குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், தற்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக...
யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 3 ஆம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன், தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில், உயிரிழந்த...
கடந்த ஜூலை மாதம் முதல் இது வரையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் 12 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்தார். கருப்பு பூஞ்சை நோய்க்கான பிரதான அறிகுறி முகத்தின் ஒரு பக்கத்தில் வலி ஏற்படுகின்றமையாகும். அத்தோடு ஒருபக்கமாக தலை வலி, தடிமன், சுவாசிப்பதில் சிரமம், மூக்கின் மேல்...
எதிர்வரும் நாட்களில் கொரோனா நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக் கலாநிதி அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு நடத்துவதற்கு அனுமதி கோரி யாழ்.பல்கலைக்கழகத்...
பாடசாலை செல்லும் மாணவர்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயார்ப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பெற்றோருக்கு அறிவித்துள்ளது. குறிப்பாக தடுப்பூசியை செலுத்துவதற்கான காலக்கெடு இறுதி செய்யப்படாத நிலையில் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முறையான உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடங்காது என வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதற்குரிய திகதிகள் மற்றும் இடங்கள்...
யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி வீதியில் பயணிப்பவர்கள், அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர்ந்து வீதிகளில் நடமாடுபவர்களுக்கு அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை இணைந்து, கொக்குவில் கே.கே.எஸ் வீதியில்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளின் ஒரு கட்டமாக சுமார் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சின் களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்தின் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் நன்மையடையவுள்ளன. அதாவது, சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தனங்கிளப்பு...
இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலையாகி, மூன்று மாதங்களின் பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டு கடந்த 12 வருடங்களாக வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடேசு குகநாதன் இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவரின் விடுதலை தொடர்பாக அவருடைய குடும்பத்தினர் குரலற்றவர்களின் குரல்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப கூடத்தின் திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்தியக் கலாநிதி இ. சுரேந்திரகுமாரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர்...
நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தமது ட்விட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் கூடிய கொரோனா தடுப்பு தேசிய செயலணி கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக எதிர்வரும்...
இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கையின் போது ஏனைய தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர். காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள வீதியில், சுயநினைவற்று கிடந்த இளைஞனை மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்தபோதே இளைஞன் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் கீரிமலை நல்லிணக்கபுரத்தை சேர்ந்த ம. ஜெனுசன் (வயது 24)...
எதிர்வரும் 20 ஆம் திகதி தாக்குதல் ஒன்று நடாத்தப்படலாம் என கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் தகவல் ஒன்றுக்கு அமைய, கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை - மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த தகவல் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில்...
வடக்கில் நேற்று 200 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் செப்ரெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களில் வடக்கு மாகாணத்தில் 6 ஆயிரத்து 667 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 225 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்த நிலையில் செப்ரெம்பர் மாதத்தின்...
காங்கேசன்துறை பிரதான வீதியில் சுயநினைவற்று வீழந்து கிடந்த இளம் குடும்பத்தலைவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது தலையில் காயம் காணப்படுவதாகப் பொலிஸார் கூறினர். அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் விசாரணைகளை முன்னெடுத்து கொலையாளிகளைக் கைது செய்யுமாறும் உறவினர்கள் காங்கேசன்துறை பொலிஸாரிடம் கேட்டுள்ளனர். அதனால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது....
சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைகளை விரைவாக திறப்பது குறித்து அரசாங்கம் ஆலோசனைகளை நடத்திவருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் அதிகாரிகளிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பாடசாலைகளை திறப்பது குறித்த கொள்கை ரீதியான முடிவை எடுப்பது கல்வி அமைச்சுக்கு உரித்தான...
யாழ்ப்பாணத்தில் குழந்தை பிரசவித்த நிலையில் பெண்ணொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய சதீஸ்குமார் அபினினி என்ற தாயாரே உயிரிழந்துள்ளார். அவரது பெண் குழந்தை நலமுடம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. “கடந்த 8ஆம் திகதி குறித்த கர்ப்பிணிப்...
வரணி, குடமியன் பகுதியிலுள்ள காட்டு பகுதியில் இருந்து, அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கிளைமோர், கப்டன் பவான் (ஐயா) – 99 எனும் வாகன தகர்ப்பு வெடிகுண்டு என்பன மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட...
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ,சட்ட ஆலோசகர் காண்டீபன் ஆகியோர் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் நாயகத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என்று கூறி உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. எனினும் பின்னர் அமைச்சின் செயலாளருடன் தொலை பேசியில் தொடர்பை மேற்கொண்ட...
Loading posts...
All posts loaded
No more posts
