கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 92 பேர் உயிரிழப்பு – புதிதாக 878 பேருக்கு தொற்று!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 92 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான இருவரும் 60 வயதுக்கு குறைவான 19 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 71 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து,...

“வடக்கில் மின்தகன சாலைகள் அமைப்பது காலத்தின் தேவை; சம்பந்தப்பட்ட சகலரும் ஒன்றிணைவோம்” – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வடக்கு மாகாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை வெளி மாகாணங்களுக்கு மின் தகனத்துக்கு அனுப்பிவைக்கப்படுவது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடமாகாணத்தில் கடந்த ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதி முதல் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையும், இறப்புக்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. வடமாகாணத்தில் இதுவரை...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மக்கள் அச்சத்தில் உள்ளனர்- சுரேஸ் பிரேமச்சந்திரன்

யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மக்கள் அச்சம் கொள்ளக் கூடிய ஒரு சூழல் தொடர்வதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து...

இலங்கை மக்களுக்கு பைசரை மூன்றாவது தடுப்பூசியாக வழங்க நடவடிக்கை!

இலங்கை மக்களுக்கான மூன்றாவது தடுப்பூசிகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை முற்பதிவு செய்துள்ளதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் அல்லது நவம்பர் மாத ஆரம்பத்திலிருந்து நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

30 க்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்துவதற்கு காலக்கெடு – அரசாங்கம்

30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் காலக்கெடுவை அறிவித்துள்ளது. குறித்த வயதுடையவர்களுக்காக தொடர்ந்தும் தடுப்பூசி நிலையங்களை இயக்க முடியாது என்பதன் காரணமாக காலக்கெடுவை வழங்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 30 வயதுக்கு மேற்பட்ட பலர் தடுப்பூசி பெற்றிருந்தாலும், ஒருசிலர்...

வடக்கு மாகாணத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

வடக்கு மாகாணத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில், மன்னார் மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளின் முதல் கட்டமாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் மாவட்ட...

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் ஜனாதிபதி தெரிவிப்பு- உறவுகள் கண்டனம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

சுமந்திரனிடம் தமிழர் தாயக சங்கம் முக்கிய கோரிக்கை!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர OMP இடத்தில் அல்ல என்று வவுனியாவில் கடந்த 1678 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இதன்போது...

பால்மா, கோதுமை மா மற்றும் சிமெண்ட் விலை குறித்து விரைவில் இறுதி முடிவு!!

எதிர்வரும் நாட்களில் பால்மா, கோதுமை மா மற்றும் சிமெண்ட் விலை தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். விலை உயர்வை அனுமதித்தால் எந்தப் பற்றாக்குறையும் இல்லாமல் பொருட்களை வழங்க முடியுமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடியதாகவும் அமைச்சர் கூறினார். உலக சந்தையில் விலை உயர்வு...

யாழ்.பல்கலை. பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் நடாத்துவதற்கு மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு !!

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை முழுமையாக நிராகரிக்கின்றோம் என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா பகுதி இரண்டானது செப்டம்பர் 16,17,18ஆம் திகதியில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய தனிமைப்படுத்தல்...

பாசையூரில் வீடொன்றுக்குள் அடாவடியில் ஈடுபட்ட கும்பல் அரை மணிநேரத்தில் சிக்கியது

பாசையூர் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்த கும்பல் ஒன்றைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் இடம்பெற்று அரை மணிநேரத்தில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். “பாசையூர் அந்தோனியார் கோயிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றுக்குள் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் புகுந்த...

பிறந்தநாள் கொண்டாட்டம்- யாழில் 35 பேருக்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் யாழ்.திருநெல்வேலி மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திருநெல்வேலிப் பகுதியிலுள்ள பிரபல விடுதியில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரும் ஓட்டுமடம் பகுதியிலுள்ள வீடொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும்...

யாழில் ஆவா குழுவை சேர்ந்த நால்வர் கைது!!

ஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடனும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த சந்துகநபர்கள் பயணித்த காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள, நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த முத்து என்பவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு...

வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் – இருவர் மீது வாள்வெட்டு – சந்தேக நபர் ஒருவர் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியார் கோவில் பகுதியில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வன்முறைக் குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “மாவடி பகுதியைச் சேர்ந்த வன்முறை கும்பல் ஒன்று, நேற்று இரவு 7 மணியளவில் முதலிய கோயில் பகுதிக்குள் உள்நுழைந்து அங்கு தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுக்கு...

கொரோனாவினால் உயிரிழந்தவரை அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி- கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவரை, அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி செய்ய அனுமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி- உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முன்னாள் கிராம அலுவலர் ஒருவர், கடந்த 16ஆம் திகதி, மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவருடைய இறுதி...

ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு?

இறக்குமதி பால் மாவின் விலையை ஒரு கிலோகிராமுக்கு 200 ரூபாவால் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்த வாரம் வாழ்க்கைச் செலவுக் குழுவால் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். கூட்டுறவு...

டெல்டா கட்டுப்பாட்டுக்குள் : மக்களின் செயற்பாடுகள் மிக மோசமாக அமைந்துள்ளது : சுகாதாரப் பணியகம்

கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் வெற்றி மற்றும் நீண்டகால தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் சாதகமான பெறுபேறுகள் வெளிவர ஆரம்பித்துள்ளதாகவும், டெல்டா வைரஸ் பரவல் வெகுவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்தார். வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்ற நேரங்களில் மக்களின் செயற்பாடுகள் மிக மோசமாக அமைந்துள்ளதாகவும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். நாட்டின் கொவிட் வைரஸ் பரவல்...

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...

யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞன் சுத்தியலினால் அடித்துக்கொலை?

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் குடும்பத்தலைவர், அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. குறித்த குடும்பத்தலைவர், ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டமையே உயிரிழப்புக் காரணம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ வல்லுநரினால் அறிக்கையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவ இடத்துக்கு அண்மையாக உள்ள கட்டடத் தொகுதியில் பெறப்பட்ட சிசிரிவி பதிவின் அடிப்படையில்,...

வடக்கு மாகாணத்தில் 20- 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை!!

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் பற்றிய விபரங்கள் அப்பிரதேசத்திற்குரிய சுகாதார...
Loading posts...

All posts loaded

No more posts