Ad Widget

பாசையூரில் வீடொன்றுக்குள் அடாவடியில் ஈடுபட்ட கும்பல் அரை மணிநேரத்தில் சிக்கியது

பாசையூர் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்த கும்பல் ஒன்றைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் இடம்பெற்று அரை மணிநேரத்தில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“பாசையூர் அந்தோனியார் கோயிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றுக்குள் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெறுமதியான பொருள்களை உடைத்து அடாவடியில் ஈடுபட்டதுடன் வீட்டிலிருந்தவர்களையும் அச்சுறுத்திவிட்டுத் தப்பித்தது.

சம்பவம் தொடர்பில் கிடைத்த தவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலில் 3 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாள் ஒன்றும் இரண்டு மரக்கட்டைகளும் கைப்பற்றப்பட்டன.

பாசையூர், மணியந்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த 22 வயதுக்கும் 27 வயதுக்கும் உள்பட்ட 7 பேரே கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படுத்தப்பட்டனர். 3 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சான்றுப்பொருள்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன” என்று பொலிஸார் கூறினர்.

Related Posts