- Monday
- April 27th, 2026
வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் சதித்திட்டம் ஊடாக என்னிடம் வலிந்து திணிக்கப்பட்டது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்தோடு, கடிதம் எழுதியதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 05.09.2021ஆம் திகதி யாழில் இருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய...
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதாக இருந்தால் முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார். நாடு திறக்கப்படும்போது மீண்டும்...
அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து, நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குச் சென்ற பொலிஸார், திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து செல்ல பணித்தனர். அத்தோடு, மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம்...
யாழ். மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்களை ஆய்வு செய்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நாளை யாழ்ப்பாணதிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். புதிய அமைச்சு பதவியை பொறுப்பேற்ற பின்னர் அவர் வடக்கிற்குச் வருவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆய்வு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் குறித்த விஜயமானது அமையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளருக்கு அறிக்கை அனுப்பும் விவகாரத்தைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எந்தச் சக்தியாலும் பிளவுபடுத்தவே முடியாது. என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களிடம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து, தமிழ் மக்கள் எதிர்நோக்கும்...
இணுவில் காரைக்கால் சிவன் கோயிலை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் நாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் சி.கௌசல்யா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “சிலரின் வீடுகள் மற்றும் விவசாய காணிகளுக்குள் வரும் நாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களை...
தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டாலும் அலட்சியமாக செயற்படாதீர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதைய வட. மாகாண கொரோனா நிலைமை தொடர்பாக கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “வடக்கு மாகாணத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி வழங்கும் பணிகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. அந்த அடிப்படையிலே...
வடக்கு மாகாணத்தில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் மாத்திரம் 75 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, வடக்கு மாகாணத்தில் நேற்று திங்கட்கிழமை 11 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பபாணம்...
வடக்கு கிழக்கில் சடலங்களை தகனம் செய்வதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் நேரடியாக குறித்த முறைப்பாட்டினை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்திருந்தார். கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள...
கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கரைச்சி பிரதேச தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த மயானத்தை அமைக்க 24 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகையில் ஒரு கோடி ரூபாயை கிளிநொச்சியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்க முன்வந்துள்ளார்....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 81 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையியேயே 81 மேலதிக வாக்குகளினால் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபசவினால் கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள்...
பாடசாலைகளை மீண்டும் திறக்க காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு, மூலக்கூறு மற்றும் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்தார். பல மேற்கத்திய நாடுகளில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், பாடசாலைகள் இன்னும் திறந்தே உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். “இந்த ஆண்டு மே மாதத்திற்குள், இலங்கை உள்பட...
கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்திருந்த சுயாதீன ஊடகவியலாளரின் பூதவுடல் இன்றைய தினம் மின் தகனம் செய்யப்பட்டது. கொடிகாமத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் (வயது 26) கடந்த வாரம் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 02ஆம் திகதி உயிரிழந்திருந்தார். சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அவரது பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் இன்று (திங்கட்கிழமை) மின்...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து பணம் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வதிரி, இரும்பு மதவடியில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இந்தப் பண உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, நூற்றுக்கணக்கானோர் வரிசையில் திரண்டனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக...
யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார் தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பாக யாழ். மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில்...
புதிதாக மின்தகன இடங்களை உடனடியாக அமைப்பதற்கான சாத்தியமில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) மதியம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ். மாவட்டத்தில் சடலங்களை மின்தகனம் செய்வதற்கான வசதி யாழ். மாநகர சபையிடம் மட்டுமே உள்ளது....
முன்னாயத்த நடவடிக்கைக்காக நாட்டிலுள்ள வேறு இடங்களில் உள்ள சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – இதுவரை 20 சடலங்களை பாதுகாப்பதற்கான குளிரூட்டி வசதிகள்...
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் தொழில் முறைகளினால் ஏற்படுகின்ற பாதிப்புக்களில் இருந்த தங்களை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் பொறுமையின் எல்லையில் இருப்பதாகவும் வடக்கு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இலங்கை அரசாங்கத்தின் அசமந்தப் போக்கினைக் கண்டித்துள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதிருந்த நம்பிக்கையினையும் இழந்துள்ளதாக...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 5 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும் நீர்வேலியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட கீரிமலையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த...
நாட்டில் 4 மாவட்டங்களில் உள்ள 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்கும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார். அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் நாளை தடுப்பூசி செலுத்தப்படுமென அவர் தெரிவித்தார். இந்த மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் அதே தடுப்பூசி...
Loading posts...
All posts loaded
No more posts
