Ad Widget

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க இனியும் காத்திருக்க வேண்டியதில்லை – பேராசிரியர் நீலிகா

பாடசாலைகளை மீண்டும் திறக்க காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு, மூலக்கூறு மற்றும் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்தார்.

பல மேற்கத்திய நாடுகளில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், பாடசாலைகள் இன்னும் திறந்தே உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்த ஆண்டு மே மாதத்திற்குள், இலங்கை உள்பட 23 நாடுகள் மட்டுமே பாடசாலைகளை மூடிவிட்டன. யுனிசெஃப் நிர்வாகப் பணிப்பாளரும் இதைத் தெரிவித்தார்.

கல்வி குறித்த ஐநா இணையதளத்தின்படி, மேற்கத்திய நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 நோய்த்தொற்றாளர்கள் இருந்தபோதிலும் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன” என்றும் பேராசிரியர் நீலிகா மாலவிகே குறிப்பிட்டுள்ளார்.

Related Posts