Ad Widget

செப்டம்பர் 21 க்குப் பின்னர் ஊரடங்கு நீக்கப்படுமா? – அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

செப்டம்பர் 21 க்குப் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டுமானால், எந்த வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்த அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டத்திலேயே ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தலை விடுத்தார் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் குறித்த சந்திப்பின்போது, மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் இதன்போது பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

Related Posts