Ad Widget

மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுது.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 கீழ் 1 தீர்மானத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும் எனவே பொறுப்புக்கூறல் விடயம் பேரவையில் இருக்கும்வரை மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியும் அரசியல் தீர்வும் தாமதமாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கடிதம் மூலம் கோரியுள்ளது.

கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று ஜெனீவாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரு பங்காளிக்கட்சிகள் அடங்கலாக ஐந்து கட்சிகள் இணைந்து, மற்றுமொரு கடிதத்தை ஏற்கனவே அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts