- Thursday
- April 23rd, 2026
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை குறித்த சம்பவத்துடன் மின்சார சபை ஊழியர் ஒருவர் தொடர்பு பட்டு உள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடமராட்சி குடாரப்பு பகுதியில் மின் தட வழியில்...
சுகாதார ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள செல்லக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ருவிட்டரில் தெரிவித்துள்ளார். அதன்படி, எரிபொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிலையங்களின் விபரங்கள்…
இலங்கையில் சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை இருப்பதாகவும், அதனை கேலிக்குட்படுத்தவேண்டாம் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(21) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமையை தாம் கண்டிப்பதாகவும் அவர்...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
காலில் முள் குத்தியதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு வட்டுக்கோட்டையை சேர்ந்த 28 வயதுடைய தருமராசா மதிகரன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் ஒன்று குத்தியதாகவும், அவ்விடத்தில் வலி ஏற்பட்டு உள்ளதாக கூறி வைத்திய சாலையில் சிகிச்சை...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றினைந்து செயற்பட்டுள்ளேன். அவரால் எப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது. நாட்டின் தற்போதைய அவலநிலைமையினை கண்டு பெரும் மனவேதனையடைகிறேன். சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து புதியஅரசாங்கத்தை ஸ்தாபிப்பது சகல தரப்பினரதும் பிரதான கோரிக்கையாக உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (20)...
யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் ஜீலை - 1ம் திகதி தொடக்கம் குடும்ப பங்கீட்டு அட்டைக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் பிரதேச செயலக பிரிவுகளில் மட்டும் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மாவட்டத்தில் உள்ள எரிபொருள் பிரச்சனையை தீர்ப்பது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ஆராயப்பட்டது அரசாங்க அதிபர் தலைமையில்...
கீரிமலைப் பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமை உடற்கூற்றுப் பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வழங்கியத் தகவலை அடுத்து, இன்று 42 மற்றும் 62 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கீரிமலை, புதிய கொலனியில் வசிக்கும் நடராசா என்னும்...
பலாலி விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதுதொடர்பில் பலாலி விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்தார். அமைச்சர் நிமல்...
அடுத்து வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்கு சைக்கிள் ஓட்டுநர்களை சோதனைக்கு உட்படுத்தி தேவையான ஆலோசனைகளை வழங்கும் புதிய நடவடிக்கை ஒன்று பொலிஸாரால் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான அறிவுறுத்தல்கள் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரால், அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், வலயங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ்...
நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் சுழற்சிமுறையில் இரண்டரை மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று முதல் மதியம் 12 மணிமுதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியில், இரண்டரை மணிநேர மின்வெட்டு சுழற்சிமுறையில்...
அரசாங்க அலுவலகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக்கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்று நிருபம் பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் 2 வாரங்களுக்கு இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. குறைந்தளவான ஊழியர்களை சேவைக்கு அழைக்கும் போது, சுழற்சி முறை மற்றும் வேறு ஏதேனும் பொறிமுறைமையை பின்பற்ற முடியும்...
யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் எவ்வித கொடுப்பனவும் இல்லாமல் பணியாற்றுவது தொடர்பில் எடுத்துக்காட்டும் விசேட தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்விலேயே இந்த விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நாட்டில் காணப்படும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் உள்ளூராட்சி சபையின் உறுப்பினர்களுக்கு கொடுப்பனவு வழங்காததால் சபையை கலைக்கப்படுகின்ற சூழல்...
பருத்தித்துறை துன்னாலை - மடத்தடியில் நள்ளிரவு வேளை வீடுடைத்து உள்நுழைந்து அங்கிருந்த 6 பேருக்கு பெருங்காயங்களை விளைவித்து 12 தங்கப் பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கொள்ளையிட்ட நகைகளில் ஐந்தரைப் பவுண் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவற்றை உடமையில் வைத்திருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த...
300 மெகாவோட் திறன் கொண்ட நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக இன்று (17) நள்ளிரவு முதல் மூடப்படவுள்ளது. அதாவது 80 நாட்களுக்கு இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக மின்சார உற்பத்தி குறைந்தாலும் தற்போதைய மின்வெட்டு அதிகரிக்கப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...
இலங்கையில் இன்றைய தினம் விடுமுறையிலுள்ள அரச பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. டெங்கு அபாயம் உள்ள பிரதேசங்களாக 74 பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு...
தற்போதைய மின்வெட்டினை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுமார் ஒன்றரை மணிநேரத்தினால் நீடிக்க வேண்டியேற்படும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் 300 மெகாவோட் மின்சாரம் நாளை மறுதினம் முதல் தேசிய மின்கட்டமைப்பிற்கு கிடைக்காது போகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகளால் நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் தொழிற்பாடுகள் நிறுத்தப்படவுள்ளமையே இதற்கான காரணம் என...
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதம புகையிரத நிலைய அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ”எதிர்வரும் 17ம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு...
பாணந்துறை வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 55 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் இரவுக் கடமையிலிருந்த போது தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பில் இரு வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நிர்வாக மட்ட விசாரணையை முன்னெடுத்து அறிக்கை வழங்குமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவமனை அத்தியட்சகருக்கு அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், சாவகச்சேரி பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரும் விசாரணைகளை...
Loading posts...
All posts loaded
No more posts
