- Thursday
- April 23rd, 2026
எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் நாளை மற்றும் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இடைநிலை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில்...
வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட கிராமசேவகர்கள் தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராமசேவகர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறித்த கிராம சேவகர்களால் நடாத்தப்படும் கவனயீர்ர்ப்பு போராட்டத்தில் கிராம சேவகர்கள் அத்தியாவசிய அலுவலர்களா?...
சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களில் 280 பேருக்கு அதிகமானவர்கள் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளனர்.
தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவுக்கு மத்தியில், அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிய தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று விசேட அறிக்கையை வெளியிட்டு பிரதமர் இதனை தெரிவித்தார்....
அரச ஊழியர்களுக்கு தனியார் துறையில் பணி புரிவதற்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய இவ்வாறு தனியார் துறையில் பணி புரிய விரும்பும் அரச ஊழியர்களுக்கு 5 வருட விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த விடயம்...
யாழ்ப்பாணத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த பத்திரிகைகள் விநியோகத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. பத்திரிக்கை விநியோக பணியில் ஈடுபடும் பணியாளர்கள் எரிபொருள் இன்மையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதால் விநியோக பணிகள் பாதிக்கப்படவுள்ளன. அதனால் பத்திரிகைகள் முடக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. இது தொடர்பில் பத்திரிக்கை நிறுவன...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை சாலை (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நேரங்களில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்கு டீசல் வழங்கப்படுவதாகவும் , தமக்கு உரிய ஒழுங்கில் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இருந்து இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை தமது...
யாழில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் குதிரை வண்டியில் தனது பயணத்தை அருட்தந்தையர் ஒருவர் மேற்கொண்டு வருகின்றார். நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அருட்தந்தை ஒருவர். தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள்காணப்படுவதன் காரணமாக குதிரை வண்டியில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது வைத்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், வடமாகாணத்தில் அவர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் கதிரமலை உமாசுதன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பல்வேறு நெருக்கடிகள் தற்போது நாட்டில் காணப்பட்டாலும் கூட அதை எதிர்கொண்டு வைத்தியர்கள் தங்களால் இயன்றவரை...
கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூதாட்டி அணிந்திருந்த நகைகள் உள்ள நிலையில் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை மூதாட்டியின் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்துக்கு தண்ணீர் இறைப்பதற்கு சென்ற உறவினர் ஒருவர் மூதாட்டி குருதிக் காயங்களுடன் சடலமாக காணப்பட்டதை அறிந்து காங்கேசன்துறை பொலிஸாருக்கு...
நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. மின்வெட்டு தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்றைய தினம் மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில்...
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள், இலங்கைக்கு சட்டரீதியாக பணம் அனுப்பும் போது அவர்கள் அனுப்பும் தொகையின் அடிப்படையில் மின்சார (electronic) வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கக்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜப்பான் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் (22) ஜப்பான் செல்லும் 12 பேர் கொண்ட...
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலங்களின் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்புக்களால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக மக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசைகளில் காத்திருந்த வேளை , நல்லூர் பிரதேச செயலர் , தமது பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்க...
92 ரக பெற்றோல் 40,000 மெட்ரிக் தொன்னுடன் இன்று (23) காலை இலங்கையை வந்தடைய இருந்த கப்பல் சுமார் ஒரு நாள் தாமதமாகும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் கஞ்சன விஜேசேகர தன்னுடைய டுவிட்டர் பகுதியில் பதிவு ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றும் நாளையும் (24) நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட...
அகதிகளைக் கடத்துவதற்கு மீன்பிடிப்படகுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு சிறிலங்காவிலுள்ள சுமார் நாலாயிரம் படகளில் GPS பொருத்துவதற்கு ஆஸ்திரேலியா ஏற்பாடு செய்யவுள்ளது. இவ்வாறு GPS பொருத்தப்படவுள்ள படகுகள் தலைமை மையமொன்றிலிருந்து அவதானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகைதந்துள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Clare O’Neil கொழும்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். சுமார் ஐந்து லட்சம் டொலர் செலவில் இவ்வாறு...
யாழ்ப்பாணம் சுன்னாகம் வழித்தடத்தில் பயணித்த பஸ்ஸில் பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணத்தினை போக்குவரத்து பிரிவு பொலிஸார் துரிதமாக செயற்பட்டு மீட்டு கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வங்கியில் 96 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு குறித்த பஸ்ஸில் மூதாட்டி ஒருவர் பயணித்துள்ளார். அவர் யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகில் பஸ்ஸில் இருந்து இறங்கி தனது...
பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பதவி விலகல் காரணமாக ஏற்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார். பதவிப் பிரமாணம் செய்வதற்கு முன்னதாக, தம்மிக்க பெரேரா தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனத்தையும் வரி...
எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பில் தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வடமாகாணத்திலும் மக்கள் மணிக்கணக்கில் வெயிலில் நீண்ட வரிசையில் காத்தி இருக்கிறார்கள். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம்...
Loading posts...
All posts loaded
No more posts
