- Thursday
- April 23rd, 2026
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் உள்ள இராணுவக் காவலரண் ஒன்றை கிராமத்து மக்கள் திரண்டு அகற்றுவதால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை உருவாகியது. வட்டுவாகல் பாலத்துக்கு நெருக்கமாக காணப்படும் சப்த கன்னியர் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் பொங்கலுக்குரிய ஏற்பாடாக முல்லைத்தீவு கடலில் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு ஆண்டு...
பொது மக்களுக்கு எரிபொருள் பகிர்ந்தளிப்பதற்கு இராணுவம் முழு ஒத்துழைப்பினை வழங்கும் என யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜய சுந்தர ஜால்மர் தெரிவித்தார். யாழ் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜய சுந்தர ஜால்மர் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தினை இன்று திங்கட்கிழமை யாழ் ஆயர் இல்லத்தில் உத்தியோகபூர்வமாக...
எரிசக்தி அமைச்சினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் முறை தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். ஜூன் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் காணப்பட்ட நீண்ட வரிசைகளைக் குறைக்க ஆரம்பத்தில் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் வரிசையில் நிற்பதில் இருந்து விடுவிப்பதற்காகவும் ஜூலை 11 அல்லது 15ஆம் திகதிகளில்...
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், பரீட்சை ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்படும்...
எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு அடுத்த 10 நாட்களுக்குள் ஏதாவது ஒரு தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் குறித்த வேலைத்திட்டத்தை மக்களுக்கு அறிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்து சுயேட்சை உறுப்பினர்களுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த விடயங்களை தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர்...
ரம்புட்டான் பழத்தை விழுங்கிய 10 வயதுச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கொல்லன்கலட்டியைச் சேர்ந்த தர்மராசா தர்சிகன் (வயது-10) என்பவரே உயிரிழந்தார். ரம்புட்டான் பழத்தை விழுங்கிய சிறுவன் திடீரென சுகவீனமடைந்து மூச்சு எடுக்க அவதிப்பட்ட போது, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் சிறுவன் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது. வலிகாமம் கிழக்கு திடீர்...
நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் சகல அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்த விசேட கலந்துரையாடலொன்று கல்வி அதிகாரிகளுக்கு இடையில் நேற்று இணையவழியில் இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலின் போது, குறித்த தீர்மானம்...
பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டது. மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலியம் மற்றும் எரிபொருளை...
அமைச்சரவையின் அனுமதியின் அடிப்படையில், 90,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் டீசலை எதிர்வரும் 7, 13 மற்றும் 15ஆம் திகதிகளில் இலங்கைக்குக் கொண்டுவரவுள்ளதாக ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை, ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விநியோகிக்க இந்திய எண்ணெய் நிறுவனமான 'ஐஓசி' திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள...
இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் நீண்ட நாட்களாக காத்திருந்த போதிலும், தமக்கான எரிபொருளை உரிய முறையில் வழங்காததால் தாம் சேவையில் இருந்து விலகி உள்ளதாக அச்சுவேலி தனியார் பேருந்து சாரதிகள் தெரிவித்துள்னர். யாழ்ப்பாணம் – அச்சுவேலிக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாத காரணத்தினால் பயணிகள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர். டீசல் தட்டுப்பாடு...
மிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம், கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் இன்று காத்திருந்தபோதே பின்னால் வந்திருந்த இரு நபர்களால் வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால் காயங்களுக்குள்ளாகியுள்ள அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முல்லைத்தீவில்...
ஒரு லட்சம் மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் நிதி அமைச்சின் கீழ் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது. இந்த கொள்வனவுக் கட்டளையின் மொத்த விலை 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள். உலக வங்கி 70 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்துள்ளது. மீதமுள்ள 20 மில்லியன் டொலர்களை லிட்ரோ வழங்கியுள்ளது. இந்த இருப்பு...
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக திட்டமிடப்பட்ட 22 ரயில்கள் இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக ரயில்வே ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத காரணத்தால் இவ்வாறு ரயில் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரத்துச் செய்யப்பட்டுள்ள ரயில் பயணங்களில் அலுவலக ரயில்கள்...
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.இதன்போது மாநகர முதல்வரால் ஜப்பான் தூதுவருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் தூதுவர் சமகால நிலைமைகள்...
கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பியோடிய கைதிகளை கண்டுபிடிப்பதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையத்தில் இன்று காலை கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். மேலும் குறித்த நிலையத்தின் பாதுகாப்புக்காக இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்...
தமக்கு பெட்ரோலை வழங்க கோரி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சிலர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டோக்கன் பெற்றவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையால் இன்றைய தினம் (புதன்கிழமை) அதிகாலை தொடக்கம் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் காலை 09 மணி போல குறித்த எரிபொருள்...
காரைநகரில் கடற்படை முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. காரைநகர் ஜே/145 கிராம சேவையாளர் பிரிவில் நீலன்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படை முகாம் அமைக்கவென அளவீடு செய்யும் முயற்சி 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதனை அடுத்து அங்கு கூடிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள்...
மேல்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என மேல்மாகாண பிரதம செயலாளர் ஜெயந்தி விஜேதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் அபராதம் விதிக்கப்பட மாட்டாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் போக்குவரத்து, சுகாதாரம், விமான நிலையங்கள், புகையிரதம், துறைமுகங்கள், முப்படைகள் மற்றும் விவசாய போக்குவரத்து போன்ற அத்தியாவசிய...
எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Loading posts...
All posts loaded
No more posts
