ஒரு லட்சம் மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் நிதி அமைச்சின் கீழ் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த கொள்வனவுக் கட்டளையின் மொத்த விலை 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
உலக வங்கி 70 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்துள்ளது. மீதமுள்ள 20 மில்லியன் டொலர்களை லிட்ரோ வழங்கியுள்ளது.
இந்த இருப்பு நான்கு மாதங்களுக்கு நாட்டிற்கு வழங்க போதுமானதாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எரிவாயு கையிருப்பில் 70 சதவீதம் உள்நாட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும். இவற்றில் 12.5 கிலோ எடையுள்ள 5 மில்லியன் சிலிண்டர்களும், 5 கிலோ எடையுள்ள ஒரு மில்லியன் சிலிண்டர்களும், 2.5 கிலோ எடையுள்ள ஒரு மில்லியன் சிலிண்டர்களும் தயாரிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 30 சதவீத எரிவாயு சிலிண்டர்கள் வணிக பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.
லிட்ரோவினால் 20 மில்லியன் டொலர்கள் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 33 ஆயிரம் தொன் சமையல் எரிவாயு ஆரம்பத் தொகுதி ஜூலை முதல் வாரத்தில் இலங்கைக்கு வந்தடையும். அந்த தொகுதி விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.