தம்மிக்க பெரேரா எம்.பியாகப் பதவியேற்பு!!

பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பதவி விலகல் காரணமாக ஏற்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.

பதவிப் பிரமாணம் செய்வதற்கு முன்னதாக, தம்மிக்க பெரேரா தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனத்தையும் வரி அனுமதி அறிக்கையையும் கையளித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அரசிதழ் அறிவித்தல் மூலம் அறிவித்தது.

Related Posts