Ad Widget

இலங்கையில் இன்று விடுமுறையில் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

இலங்கையில் இன்றைய தினம் விடுமுறையிலுள்ள அரச பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

டெங்கு அபாயம் உள்ள பிரதேசங்களாக 74 பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அவற்றுள் சீதுவ, குண்டசாலை, வத்தேகம, குளியாப்பிட்டிய, வாரியபொல, பதுளை, பசறை, வெலிமடை, பெல்மடுல்ல மற்றும் கலிகமுவ ஆகியவை அடங்குவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சுற்றாடலை சுத்தமாக பேணுவதன் மூலம் டெங்கை கட்டுப்படுத்தலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் நுளம்புகள் 10 வருடங்களின் பின்னர் மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார நுளம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார்.

மேலும், நாடளாவிய ரீதியில் நுளம்பு பெருகும் பிரிட்டோ சுட்டெண் தற்போது 20 ஐ தாண்டியுள்ளது. இந்த நிலைமை டெங்கு தொற்றுநோய்க்கு வழிவகுக்கும் முக்கிய காரணியாக குறிப்பிடப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நுளம்பின் முட்டை வரட்சியான காலநிலையில் ஒரு வருடத்திற்கும் மேல் இருக்கும். மேலும் அந்த முட்டை தண்ணீருடன் சேரும் போது 8 முதல் 10 நாட்களுக்குள் ​​​​ மீண்டும் நுளம்புகள் உருவாகி சூழலில் சேருகின்றன.

இதன்படி, அதிக அளவில் சுற்றுச்சூழலில் எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் போத்தல்கள் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது.

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டடங்களில் காணப்படும் கொங்கிரீட், (Concrete slabs) நுளம்புகள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான சூழலிலேயே டெங்கு தொற்று மற்றும் நுளம்பு பெருகும் இடங்கள் அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழலை சுத்தம் செய்யுமாறு அந்தச் சங்கத்தின் உறுப்பினர் பிரசாத் கொலம்பகே அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில், 31,000 டெங்கு வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள போதும் கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம் 25,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் இன்று விடுமுறையில் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

இந்த வழக்குகளில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன.

டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பினால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த அபாயம் குறித்து மக்கள் மற்றும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Related Posts