- Thursday
- April 23rd, 2026
அரசாங்க ஊழியர்களுக்கு வௌ்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், நீதிமன்ற செயற்பாடுகளை தடை இன்றி முன்னெடுத்து செல்ல, நீதிமன்றங்கள் வெள்ளிக் கிழமைகளில் இயங்கும் நிலைமையை அறிவிக்குமாறு பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரியவிடம் கோரப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதற்கான கோரிக்கையை கடிதம் ஊடாக பிரதம நீதியரசருக்கு அறிவித்துள்ள நிலையில்,...
யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும்,பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான சாதகமான முடிவுகள் நேற்று முன்தினம் (13.06.2022) நடைபெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், விரைவில் குறித்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர்...
இரண்டு வாரங்களிற்கு பின்னரே மீண்டும் எரிவாயு கப்பல் இலங்கைக்கு வரும் என தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் நிறுவனத்தின் முன்னைய அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவில்லை எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக விநியோகஸ்தர்களை தொடர்புகொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார். முன்னைய தலைமைத்துவம் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாததாலும் விநியோக விதிமுறைகளிற்கு ஏற்ப கட்டணங்களை செலுத்த முன்வராததாலும் கடல்கள் இன்று...
சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியா நோக்கி செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை கடற்பரப்பில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை, முலைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் திருகோணமலை...
எதிர்வரும் நாட்களில் டீசல் மற்றும் பெற்றோல் தட்டுப்பாடு அதிகரிக்கும் என பெற்றோலிய கூட்டுத்தாபன உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, நாட்டில் எரிபொருள் வரிசைகள் மேலும் நீடிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுமார் 350 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் 800 மெற்றிக் தொன் டீசல் உற்பத்தி செய்யப்படுகிறது. எனினும், அந்த அளவுகள்...
உலக வங்கியின் ஒத்துழைப்பின் கீழ் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிதி உதவியை வழங்கும் நோக்கில் 03 மாத கால வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் பந்துல திலகசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த செயற்றிட்டத்தின் கீழ் குடும்பமொன்றுக்கு மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்காக ஐந்தாயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரத்து...
அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்து உள்ளனர். அச்சுவேலி சந்தையில் இன்றைய தினம் (புதன்கிழமை) காலை இந்த கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.
பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் இந்திய சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அந்தவகையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்தியாவில்...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இன்று (15) எரிபொருள் விநியோகம் செய்யப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இந்தப் பட்டியல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
உள்ளக மற்றும் வெளியரங்குகளில் தொடர்ந்து முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்னும் சுகாதார அமைச்சின் தீர்மானம் தமக்கு அதிருப்தி அளிக்கிறது என்றும் மேலும் முகக்கவசம் அணிவது தற்போதைய நிலையில் ஆரோக்கியமானதாகவும் தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ நிபுணர் சங்கம் தொடர்ந்து பொதுமக்களிடம் முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்னும் சுகாதார அமைச்சின் தீர்மானம்...
மிழர்கள் பாரம்பரியமாக வழிபட்ட குருந்தூர் மலையில் சிவன் வழிபாடு இருந்த இடத்திலே பலாத்காரமாக புத்தரின் சிலையை வைப்பதற்குஅகில இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலைப்பகுதி தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு இனங்காணப்பட்ட தொல்பொருள் இடத்தில் புதிதாக விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கு அப்பகுதி மக்கள்...
நாட்டில் நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 வீதமான சிற்றூண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய சுயத்தொழில் வர்த்தக சங்கம், சிறிய மற்றும் நடுத்தர சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து பலத்த காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சைப் பெற்று வந்த மன்னார் நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் மீது இவ்வாறு கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம்...
தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு, நாட்டின் பொருளாதாரம் உறுதித்தன்மைக்கு வருவதற்கு சுமார் 18 மாதங்கள் ஆகும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது பெரும் டொலர் நெருக்கடி மற்றும் கடன் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனால் அதிக எண்ணிக்கையிலான தனியார் கடனாளிகள் காரணமாக சிரமங்களை...
முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையுடன் தாம் உடன்படவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, கொரோனா பேரிடரை ஒழிக்காமல், இதுபோன்ற தீர்மானங்களை கட்டாயமாக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். இதேநேரம், நோயாளிகள் தொடர்ந்தும் முகக்கவசம்...
கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கைகளில் இரத்தம் படிந்துள்ளதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மதத் தலைவர்களாலும் தடுக்க முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் படுகொலை...
நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 08 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாணவர்கள் ஆசிரியர்கள் இருந்தவேளை குளவி கூட்டில் இருந்து கலைந்த குளவிகள் மாணவர்கள் ஆசிரியர்களை கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புதியதாக இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி, தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சு என இரண்டு அமைச்சுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள்...
எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் ஏற்ற இறக்கமான எரிவாயு விலை மற்றும் டொலரை கருத்தில் கொண்டு விலை சூத்திரமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எரிவாயு விலை உயர்வினால் ஏற்பட்ட நட்டத்தை நாட்டு மக்கள் அனைவரும் செலுத்த வேண்டியுள்ளது....
நவீன தொழில்நுட்பத்தினூடாக வினைத்திறன்மிக்க சேவையை வழங்கி இலங்கை துறைமுகத்தில் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களை தாமதமின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின் முன்னேற்ற...
Loading posts...
All posts loaded
No more posts
