Ad Widget

தொடர்ந்து முகக்கவசம் அணியுமாறு மருத்துவ நிபுணர்கள் சங்கம் கோரிக்கை

உள்ளக மற்றும் வெளியரங்குகளில் தொடர்ந்து முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்னும் சுகாதார அமைச்சின் தீர்மானம் தமக்கு அதிருப்தி அளிக்கிறது என்றும் மேலும் முகக்கவசம் அணிவது தற்போதைய நிலையில் ஆரோக்கியமானதாகவும் தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ நிபுணர் சங்கம் தொடர்ந்து பொதுமக்களிடம் முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்னும் சுகாதார அமைச்சின் தீர்மானம் தொடர்பாக அதிருப்தி வெளியிட்டுள்ள மருத்துவ நிபுணர்கள்சங்கம் இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

பொதுமக்களுக்கு முகக்கவசம் அணியத் தேவையில்லை என்ற சுகாதார அதிகாரிகளின் முடிவு கவலை அளித்துள்ளது. மருத்துவமனை அமைப்புகளில் சுகாதார பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியமா? என்பது குறித்து எதுவும் அமைச்சினால் குறிப்பிடப்படவில்லை.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் நிலையில் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனும் அரசாங்கத்தின் முடிவு மிகவும் ஆபத்தானது.

இந்நிலையில், தற்போது நாட்டில் நிலவும் ஆரோக்கியமான சுகாதார விதிமுறைகளை மாற்ற வேண்டாம். குறிப்பாக முகக்கவசம் கட்டாயம் இல்லை என்னும் முடிவை மாற்ற இது பொருத்தமான நேரம் அல்ல.

இத் தீர்மானத்தினால் தேவையற்ற சுவாச நோய் தொற்றுகளால் பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடு உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் இதனை தவிர்க்க அனைத்து தனிநபர்கள், நிறுவனங்கள் முகக்கவசம் அணியும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

Related Posts