Ad Widget

வெள்ளிக்கிழமை விடுமுறை நீதிமன்றங்களுக்கு வேண்டாம் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசருக்கு கடிதம்

அரசாங்க ஊழியர்களுக்கு வௌ்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில், நீதிமன்ற செயற்பாடுகளை தடை இன்றி முன்னெடுத்து செல்ல, நீதிமன்றங்கள் வெள்ளிக் கிழமைகளில் இயங்கும் நிலைமையை அறிவிக்குமாறு பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரியவிடம் கோரப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதற்கான கோரிக்கையை கடிதம் ஊடாக பிரதம நீதியரசருக்கு அறிவித்துள்ள நிலையில், வெள்ளிக் கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் அந் நாட்களில் இயங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

பொது விடுமுறை தொடர்பில் முடிவெடுக்கும் சட்ட ரீதியிலான அதிகாரம் தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணிகள் சங்கம், நீதிமன்றம் இயங்குவது தொடர்பில் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என கோரியுள்ளதாக அறிய முடிகிறது.

எவ்வாறாயினும் வெள்ளிக் கிழமை பொது விடுமுறைக்குள் , குறித்த அறிவிப்பில் நீர் வழங்கல், மின்சாரம், சுகாதாரம், கல்வி, பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் உள்ளடக்கப்படவில்லை.

அரசாங்க ஊழியர்களுக்கு வௌ்ளிக்கிழமையில் விடுமுறை வழங்குவதற்கான யோசனை கடந்த 13 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமையில் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts