Ad Widget

இரண்டு வாரங்களிற்கு பின்னரே மீண்டும் எரிவாயு கப்பல் வரும் – லிட்ரோ தலைவர்

இரண்டு வாரங்களிற்கு பின்னரே மீண்டும் எரிவாயு கப்பல் இலங்கைக்கு வரும் என தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் நிறுவனத்தின் முன்னைய அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவில்லை எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக விநியோகஸ்தர்களை தொடர்புகொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னைய தலைமைத்துவம் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாததாலும் விநியோக விதிமுறைகளிற்கு ஏற்ப கட்டணங்களை செலுத்த முன்வராததாலும் கடல்கள் இன்று காலியாக உள்ளன என முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உண்மை நிலவரத்தை பொதுமக்களிற்கு தெரியப்படுத்தவேண்டியது எனது கடமை அடுத்த தொகுதி எரிவாயு வருவதற்கு 14 நாட்கள் எடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனினும் இதற்கு முன்னதாக விநியோகஸ்தர்களை தொடர்புகொள்ளப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts