Ad Widget

எரிபொருள் வரிசையில் காத்திருந்த சாரதி மரணம்!

பாணந்துறை வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 55 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts