Ad Widget

பட்டதாரிகளையும் இளைஞர்களையும் பகடைக்காய்களாக்கி யாழில் அரசியல்; அங்கஜன் இராமநாதன்

இளைஞர்களையும், வேலையற்ற பட்டதாரிகளையும் பகடைக்காய்களாக்கி அரசியல் ஆதாயம் பெற்றுவிட்டு அவர்களை நடுத்தெருவில் விடும் அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். (more…)

தென்னிலங்கையில் இருந்து எடுத்து வரப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை தேவை

யாழ். குடாநாட்டிற்கு தென்னிலங்கையில் இருந்து எடுத்து வரப்படும் பொருட்கள் பலவும் காலம் கடந்தவையாகவும் உற்பத்தித் திகதி அவற்றின் முடிவடையும் திகதி என்பன குறிக்கப்படாமல் வர்த்கர்களால் எடுத்துவந்து வியாபாரம் செய்யப்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக (more…)
Ad Widget

வடமாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கான ஆட்சேர்ப்பு

வடமாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கான ஆசிரியர் சேவையின் வகுப்பு மூன்றாம் தரம் இரண்டு பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (more…)

இணைந்த மாகாண சபை வேண்டும்: கூட்டமைப்பு

பொலிஸ்,காணி மற்றும் நிதி அதிகாரங்கள் முழுமையாக கையளிக்கப்பட்டதும் வடக்கு,கிழக்கு மாகாண சபைகள் இணைந்த மாகாண சபையாக அமைக்கப்படல்வேண்டுமென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது. (more…)

ஈழத்தில் பிரபலமான சிற்பக் கலைஞர் கலாபூசணம் ஏ.வி. ஆனந்தன் காலமானார்

ஈழத்தில் பிரபலமான சிற்பக்கலைஞரும் ஓவியருமான கலாபூசணம் ஏ.வி. ஆனந்தன் நேற்றயதினம் காலை மாரடைப்பினால் யாழ். போதனா வைத்தியசாலையில் காலமானார். (more…)

பாஷையூரில் இரவிரவாக அமைக்கப்படுகின்றது பாரிய படைமுகாம்!- மக்கள் அச்சத்தில்

பாஷையூரில் மக்கள் முன்னேற்றக் சனசமூக நிலையம் அடங்கலாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாமில் அவசர அவசரமாக நிரந்தரக் கட்டிடங்கள் அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். (more…)

வடக்கில் 110,000 பேர் வாக்களிக்க முடியாத நிலை: பப்ரல்

வட மாகாணத்தில் சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் அடையாள அட்டையில்லாத காரணத்தினால் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளனர்' என்று பப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. (more…)

பப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவை

பப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கான 'அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவை' நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (more…)

பாரதிய ஜனதா கட்சி எம்.பிக்கள் புதனன்று யாழ்.விஜயம்

இந்திய பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் எதிர்வரும் 5 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். (more…)

பொலிஸாருக்க எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மானிப்பாய் வாசி முறைப்பாடு

எந்தவிதமான காரணமும் தெரிவிக்காது தனது வீட்டினுள் பொலிஸார் அத்துமீறி நுழைந்ததுடன் தேடுதலும் நடத்தியமை தொடர்பில் குறித்த வீட்டில் வசித்து வருபவரான அரச உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

தமிழர்களின் தனிக்கலாச்சாரத்தை விழிப்புடன் பாதுகாப்போம்; விந்தன்

சட்டம் ஒழுங்கு என்பதற்கு அப்பால் தமிழர்களுக்கு என்று தனிக்கலாச்சாரம் உண்டு எனவே அதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். (more…)

யாழ்.குடாக்கடலில் சட்டவிரோதமான முறையில் தடை செய்யப்பட்ட மீன்பிடியை ஒழிக்க நடவடிக்கை

யாழ்.குடாக்கடலில் சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி தொழில் நடைபெறுவதாகவும் அவற்றை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ். மாவட்ட நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். (more…)

மனைவியைத் தீ மூட்டிக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் கணவன் கைது

ஒரு பிள்ளையின் தாயை மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்டிக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் தலைமறைவாய் இருந்த அப்பெண்ணின் கணவனைக் கைது செய்துள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி விக்கிரமாராட்சி தெரிவித்துள்ளார். (more…)

இளம் பெண் தீ மூட்டி கிணற்றில் பாய்ந்து தற்கொலை: சுன்னாகத்தில் சம்பவம்

சுன்னாகத்தில் இளம் பெண் ஒருவர் தனக்கு தானே தீவைத்து கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

ஈழத்தமிழருக்கு அமெரிக்க அரசின் உயா் விருது!

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன், அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான "Champion of Change" விருது வழங்கி அண்மையில் கெளரவிக்கப்பட்டுள்ளார். (more…)

யாழ். வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா

யாழ்ப்பாணம் குருநகரில் புதிதாக அமைக்கப்பட்ட வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா சனிக்கிழமை அந்த பிரதேச மக்களினால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. (more…)

இரு வேறு விபத்துக்களில் இருவர் பலி!

கிணற்றில் விழுந்து வயோதிப பெண் மரணம் யாழ்ப்பாணம் மாதகல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். (more…)

யாழில் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபா பெறுமதியான மதுபானம் விற்பனை

யாழ்ப்பாணத்தில் நாளொன்றுக்கு சராசரியாக ஒரு கோடி ரூபாவிற்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. (more…)

ஓய்வூதிய விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் நிதி அமைச்சு

இலங்கையில் விவசாயிகளுக்குரிய ஒய்வூதியம் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அவர்களில் பலரும் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. (more…)

மகளை கண்டுபிடித்து தருமாறு நாமலிடம் கண்ணீர் விட்ட தாய்

காணாமல் போன தனது மகளை தேடித் தாருங்கள் என்று காணாமல் போன யுவதியொருவரின் தாய், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் காலில் விழுந்து கண்ணீருடன் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts