Ad Widget

யாழ். அபிவிருத்திக்கான உதவிகளை வழங்க ஜப்பான் உறுதி

J02(79)ஜப்பான் அரசாங்கத்தினால் யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு உதவிகள் மேற்கொள்ளப்படும் என டோக்கியோ தொழில்நுட்ப நிறுவன குழுமத்தின் பேராசிரியர் சினோவூ ஜயமஹசி உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மேற்படி குழுவினர் யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினை நேற்று காலை யாழ். மாவட்டச் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது, ‘ஜப்பான் அரசாங்கத்தினால் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகள் மற்றும் நிரப்பப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள், யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய நிர்மாணப் பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம் குறித்து அரச அதிபரிடம் கேட்டறிந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் ஜப்பான் குழுமத்தினருக்கு அரச அதிபர் கருத்துக் கூறுகையில், ‘யாழில் உட்கட்டமைப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக முதலீடு, வேலைவாய்ப்புக்கள் அதிகம் தேவைப்படுகின்றன.

இதுவரை காலமும் ஜப்பான் அரசாங்கத்தினால் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களினால் மக்கள் நன்மையடைந்துள்ளதுடன், இதற்காக யாழ். மாவட்ட மக்கள் சார்பாக ஜப்பான் அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்’ என்றார்.

இதற்கு பதிலளித்த பேராசிரியர் சினோவூ ஜயமஹசி, ‘மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவில் நிறைவேற்றிக் கொடுப்பதுடன் எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்கான உதவிகளை வழங்குவதாக’ உறுதியளித்தார்.

இச்சந்திப்பில், போராசிரியர் ஆணந்தகுமார, சூசுகா சர்வதேச பல்கலைக்கழக சி.ஓ.சி. சென்ரர் இயக்குனர், ஹரூயோ நஹமூரா பூலோக தொடர்பு முகாமைத்துவ பணிப்பாளர், ஹிரோயோகி குபோடபா சிரேஸ்ட பிரதி இயக்குனர், ஓ.டி.ஏ. நவலேசன் பூனிட் ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts