Ad Widget

திரும்பி செல்கின்றது வடக்கு நிதி! கூட்டமைப்பின் புதிய கல்வி அமைச்சருக்கு சவால்!

Kurukula -rajha-education ministorவடக்கு மாகாணசபையினது கல்வி மேம்பாட்டிற்கென ஒதுக்கப்பட்ட சுமார் 400 மில்லியன் நிதி செலவிடப்படாது திருப்பப்படவுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்வி அமைச்சருக்கு மிகப்பெரும் சவாலாக இந்த விவகாரம் அமையப்போவதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பவற்றுடன் இந்திய அரசினது உதவியுடனும் யுத்த பாதிப்பிற்குள்ளான வடக்கிற்கென இந்நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதிலும் வடக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களினைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலைகளினிலும் புதிய வகுப்பறை கட்டுமானங்கள் மற்றும் திருத்த வேலைகளை செய்விக்க இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியே திரும்பிச்செல்வது தற்போது நிச்சயமாகியுள்ளது.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி கூட்டமைப்பு ஆட்சிபீடமேறு முன்பாக மனம் போன போக்கினில் நிர்வாக கட்டமைப்புக்களை மாற்றியமைந்திருந்தமை தொடர்பாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தது. அதன் எதிரொலியாகவே தற்போது வடக்கு மாகாணசபை அதிகாரிகளிடையே எழுந்துள்ள வறட்டு கௌரவ இழுபறிகளினாலேயே தற்போது இந்நிதி திரும்பிப்போகலாமென அச்சம் எழுந்துள்ளது.

யுத்தம் காரணமாக கடும் அழிவிற்குள்ளாகியுள்ள வன்னி பாடசாலைகளினில் பெரும்பாலானவற்றினில் இன்று வரை மாணவர்கள் மரங்களிலும் கொட்டில்களிலுமேயே கல்வி கற்று வருகின்றனர்.இந்நிலையினில் இலங்கை அரசினால் வழமையாக ஒதுக்கப்படும் வருடாந்த நிதி ஒதுக்கீடுகள் அடுத்த ஜந்து வருடங்கள் வரைக்கும் எல்லைப்புற சிங்கள குடியேற்றப்பாடசாலைகளிற்கென ஆளுநரால் ஒதுக்கப்பட்டுவிட்டது. ஆளுநரது பணிப்பின் பேரினில் இப்பாடசாலைகளினில் நிர்மாணப்பணிகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஒரேயொரு மாணவன் மட்டுமே கல்வி கற்கும் சிங்கள பாடசாலையொன்றிற்கு மட்டும் சுமார் நாலு மில்லியன் நிதியினில் அத்தகைய புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையினில் கடுமையான யுத்த பாதிப்பிற்குள்ளான ஏனைய தமிழ் பாடசாலைகளிற்கென ஒதுக்கப்பட்ட நிதியினையே தமது வறட்டு கௌரவத்தினை முன்னிறுத்தி திருப்பிவிடுவதினில் அதிகாரிகள் முனைப்பு காட்டிவருகின்றனர். தற்போது வடக்கு மாகாணசபை பொறுப்பேற்றுள்ள நிலையினில் அதன் கல்வி அமைச்சருக்கு சவால் விடுவதாக இவ்விவகாரம் அமைந்துள்ளது. இதனை அவர் எவ்வாறு எதிர்கொள்வாரென்பதுடன் வழமை போன்று நிதி ஒதுக்கீடு மாகாணசபைக்கு கிட்டவில்லையென பழைய பல்லவி பாடுவாரா என்பதே அனைவரும் கேள்வியாகவுமுள்ளது.

Related Posts