Ad Widget

தம்பிராசா உண்ணாவிரதத்தில் குதிப்பு

யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபையின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட த.மு.தம்பிராசா இன்று காலை தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

thambirasa

கடந்த மாதம் இவர் வவுனியாவில் இருந்து தனது கோரிக்கைகளான தடுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் மற்றும் அரசு தமிழ மக்களுடன் நல்லூறவைப் பலப்படுத்தும் வகையில் கடந்த யுத்தத்தின்போது கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களை விடுதலை செய்யக் கோரியும் நடைபாதை யாத்திரையை மேற்கொண்டு இருந்தார்.

இன்று மீண்டும் தன்து கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் உண்ணாவிரதத்தை மேற்க்கொள்ளவுள்ளார்.

இதன்போது முத்தையாப்பிள்ளை தம்பிராசா தெரிவிக்கையில்,

வலிகாமம் வடக்கில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்துவருகின்ற மக்களின் வீடுகள் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்படுகின்றமையை நிறுத்துமாறு கோரியும் அங்கு மக்களை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தியும் தான் தற்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.

நாளை வெள்ளிக்கிழமை மாலை இந்த உண்ணாவிரதத்தை நிறைவுசெய்வதுடன், மேற்படி விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடும் மகஜர் ஒன்றை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Posts