- Sunday
- July 13th, 2025

வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமது அமைச்சுப் பொறுக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். (more…)

2012 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் தமது பெயர்கள் இணைக்கப்படாமை அடிப்படை மனித உரிமையை மீறும் செயல் எனத் தெரிவித்து யாழ். வாசிகள் இருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். (more…)

வட மாகாண சபை முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் முன்னிலையில் மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். (more…)

யாழ். தலைமையகத்தை சேர்ந்த படையினரால் இராணுவத்தின் 64 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்த தானம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. (more…)

கிழக்கு மாகாணம் வடக்குடன் இணைந்து செயற்பட வேண்டுமென நினைத்தால் வடமாகாணமும் அதற்கு சம்மதிக்குமானால் அரசாங்கம் அதனை கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும். என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். (more…)

நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தலில் இமாலய வெற்றியொன்றை நான் பெற்றிருக்கவேண்டிய நிலையில் சில ஊடகங்களின் செயற்பாட்டால் அந்த வெற்றி கிடைக்கவில்லையென (more…)

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினரும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் தம்பியுமான க.சர்வேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன், வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் எம்.தியாகராஜா ஆகிய மூவரும் இன்று புதன்கிழமை (16.10.13) வவுனியாவில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். வவுனியா சட்டத்தரணி க.தயாபரன் இவர்களுக்கு சத்தியப்பிரமாணம்...

யாழ்.இளைஞர் சேவை மன்றத்தின் பணிப்பாளர் ரி.ஈஸ்வரராஜா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சினாலே இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். (more…)

போரில் உயிர் நீத்தவர்களுக்கும் மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைக்கப்பட்ட கல்லறைகளுக்கும், அவர்களுடைய உறவினர்களும் உரித்துடையவர்களும் அஞ்சலி செலுத்துவதற்கு வடக்கு மாகாண சபை வழி செய்து தருமாறு கோரி சாவகச்சேரி பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. (more…)

உன்னால் முடிந்தால் செய்; அல்லது செத்துமடி'' என்ற வாசகத்தை உங்கள் மனக் கண் முன் தினமும் வையுங்கள். எமது பூமி சுதந்திரக் காற்றை உள்ளேயும் வெளியேயும் இழுத்துவிட வைக்க நீங்கள் தயாராகுங்கள் (more…)

வட மாகாண போக்குவரத்து மற்றும் கடற் தொழில் அமைச்சர் பி.டெனிஸ்வரனிற்கும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதுவர் வே.மகாலிங்கத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. (more…)

13 பிளஸ் பிளஸ் 13 மைனஸ் ஆக மாறிவிட்டதாக தமிழர் விடுதலை இயக்க (ரெலோ) அரசியல் தலைவரும், வடமாகாண சபை உறுப்பினருமான கனகலிங்கம் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். (more…)

இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க இராணுவம், மக்களுக்கு தொடர்ந்தும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார். (more…)

எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பது என்பதும், எமது மக்களின் வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புகின்ற நிலையான அபிவிருத்தி என்பதும் நிலையான அரசியற் சுதந்திரத்திலேயே சாத்தியமாகும் (more…)

வடமாகாண சபையின் மூன்று அமைச்சர்கள் இன்று காலை தமது கடமைகளை யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகங்களில் பொறுப்பேற்றனர். (more…)

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மக்களின் உரிமைகளை விட வேறு பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் கேட்டுக்கொண்டுள்ளார். (more…)

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தவுள்ளதை தமது கூட்டமைப்பு எதிர்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எ.சுமந்திரன் கூறியுள்ளார். (more…)

காணாமற்போனோரின் உறவுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்று மன்னார் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. (more…)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். (more…)

All posts loaded
No more posts