Ad Widget

மாநகர சபைக்கு எதிராக விசாரணை குழு நியமிக்க கோரிக்கை

c-v-k-sivaganamயாழ். மாநகர சபையின் செயற்பாடுகளை விசாரிப்பதற்காக குழுவொன்றினை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை வட மாகாண சபை தவிசாளர் கந்தை சிவஞானத்தினால் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் விடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாண சபையின் வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதம் நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது.

மாநகர சபையின் ஆளனி விபரங்கள், புதிய ஆளனியினர் நியமிப்பு, தற்போதய மாநகர சபை நிர்வாகம் பதவியேற்ற பின் மாநகர சபையின் கணக்கிலுள்ள நிலையான வைப்பு பற்றிய விபரம், மாநகர சபையின் நிதி பயன்படுத்தப்பட்ட விதங்கள் தொடர்பான விசாரணைகள் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்பட்ட அங்காடிக் கடைத் தொகுதிகள் அப்படியே கைவிடப்பட்டமையினால் ஏற்பட்ட நிதி நட்டம், யாழ். நகரில் சில வர்த்தகக் கட்டிடங்கள் மாநகர சபைக்கு தெரியாமல் அமைக்கப்படுகின்றமை, மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட சில வியாபார நிலையங்கள் மறைமுகமாக உறுப்பினர்களினால் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பாக மாகாண சபை உறுப்பினர்களான அஸ்மின் ஐயூப், இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோர் குழுநிலை விவாதத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts