- Wednesday
- August 6th, 2025

உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சுன்னாகம் பகுதியில் மின்உற்பத்தி நிலையங்களால் அப்புறப்படுத்தப்படுகின்ற கழிவு ஒயில் மற்றும் கிறிஸ் நிலத்தடி நீரில் கலக்கப்பட்டுள்ளதாக (more…)

இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வருகை தரும் பாப்பரசர் பிரான்சிஸ், மன்னார் மடு திருத்தலத்திற்கு 14ஆம் திகதி வருகை தந்து மாலை 3 மணிக்கு திருப்பலி ஒப்புகொடுப்பார் என கர்தினால் (more…)

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு கண்காட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளது. (more…)

வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் அன்பே சிவம் அமைப்பு வடக்கின் குடிநீர் விநியோகத்துக்கென இன்று சனிக்கிழமை (16.08.2014) மூன்று இலட்சம் ரூபாவைக் கையளித்துள்ளது. வடக்கு மாகாணம் கடும் வரட்சியை எதிர்கொண்டுள்ள நிலையில் பல பிரதேசங்களில் குடிநீருக்குப் பாரிய பற்றாக்குறைவு ஏற்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவப் பிரிவின்...

நல்லூர்க் கந்தனின் பெருந்திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. (more…)

பளை, இத்தாவில் பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற வயோதிபரை பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் வயோதிபர் படுகாயமடைந்து, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (15) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்ணொருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்பவமொன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

யாழ்ப்பாணம் மாநகர சபையால் நகர்ப்பகுதியில் குத்தகைக்கு விடப்பட்டகடைகள் உபகுத்தகைக்கு விடப்பட்ட விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சரும், முதலமைச்சருமான க.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று தெரியவருகின்றது. (more…)

இராணுவம் எனில் இலவசம் மக்களுக்கு மட்டும் கட்டணம், வீடமைப்பு அதிகார சபையின் நடவடிக்கை குறித்து விசனம்
14 ஆண்டுகளால் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணி இருந்தபோது, அதற்குரிய கட்டணம் எதனையும் கோராத தேசிய வீடமைப்பு அதிகாரசபை, தற்போது அங்கு மக்கள் குடியமர முற்படும் போது மட்டும் கட்டணங்களைக் கோருகின்றது என்று விசனம் தெரிவிக்கிக்கப்படுகின்றது. (more…)

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது பதவிக் காலத்தைப் பூர்த்தி செய்து இந்த மாத இறுதியுடன் விலகிச் செல்கின்றமையை அடுத்து புதிதாக அப்பதவிக்கு வரும் இளவரசர் செயிட் அல் ஹுசைன் குறித்து இலங்கை அரசு நம்பிக்கை வெளியிட்டிருக்கும் அதேசமயம், (more…)

சண்டிலிப்பாய் பிரதேசத்துக்குட்பட்ட விளான்பகுதியிலுள்ள ஜுஸ் தொழிற்சாலையொன்றில் சுகாதாரத்துக்கு ஒவ்வாத வகையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் ஜுஸ் பைக்கற்றுக்களை (more…)

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா நேற்று வெகு விமர்சையாக இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை பக்தர்கள் கூடி நின்ற ஆலயத்தின் முன் பகுதி மேல் வானில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்தது. (more…)

வைத்தியர் ஒருவர், இயங்க மறுத்த தனது மோட்டார் சைக்கிளை வீதியில் வைத்து தீயிட்டு எரித்த சம்பவம் வியாழக்கிழமை (14) மல்லாகம் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. (more…)

சுன்னாகம் நகரப் பகுதியை அழகு செய்யும் வகையில் மின்கம்பங்களுக்கு அருகில் வைக்கப்பட்ட பூச்சாடிகளில் சில, நேற்று வியாழக்கிழமை (14) அதிகாலையில் திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் வெள்ளிக்கிழமை (15) தெரிவித்தனர். (more…)

மடுவுக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவை, எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்ப்பதாக யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார். (more…)

க.பொ.த. உயர்தரத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பவியல் பாடத்துறைக்காக உயிர்முறைமைகளுக்கான தொழினுட்பம் மற்றும் தொழினுட்ப விஞ்ஞானம் ஆகிய பாடங்களைப் போதிப்பதற்கு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பொருத்தமான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (more…)

இந்தியாவின் 68 ஆவது சுதந்திரதின நிகழ்வு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் இன்று(15) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. (more…)

மீசாலை உசன் பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு லேகியம் எனப்படும் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த 27 வயதுடைய சந்தேகநபரை நேற்று கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் இன்று தெரிவித்தனர். (more…)

All posts loaded
No more posts