Ad Widget

வரிப்பணம் செலுத்த தவறின் சட்ட நடவடிக்கை – இறைவரி திணைக்கள யாழ். மாவட்ட ஆணையாளர்

யாழ்ப்பாணத்தில் 3000 பேர் வரையிலேயே இறைவரி திணைக்களத்திற்கு வருமானவரி செலுத்தி வருகின்றார்கள் என யாழ். மாவட்ட ஆணையாளர் மு.கணேசராசா தெரிவித்தார்.

M-Kanesa-rada

யாழ். பிராந்திய உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர் வருமான வரி செலுத்துபவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏனைய மாவட்டங்களை விட யாழ். மாவட்டத்தில் திரட்டுப் படிவம் வழங்கும் வழங்கும் வீதம் அதிகமாகவுள்ளது. அதன்படி இதுவரை 3000 மேற்பட்டவர்கள் இறைவரி திணைக்களத்திற்கு வரி செலுத்தி வருகின்றனர்.

high-tax-pay

இவ்வாறு வழங்குபவர்களை கௌரவிக்கும் முகமாக இன்று ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் 21பேர் கௌரவிக்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் கோல்ட் காட்டையும் 14பேர் சில்வர் காட்டையும் பெற்றுக் கொண்டனர்.

இந்த கௌரவிப்பு நிகழ்வானது கடந்த 2013ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றது. இவ்வாறு கௌரவிப்பவர்களது எண்ணிக்கை வீதம் அதிகரித்துச் செல்கின்றதையும் காணமுடிகின்றது.

இவ்வாறான காட்டுகளை பெறுபவர்கள் நாட்டின் தேசிய வளர்ச்சிக்கு உழைப்பவர்கள் என்ற அடிப்படையில் நாட்டின் எப்பாகத்திற்கு சென்றாலும் மதிக்கப்பட்டு முன்னுரிமை வழங்கப்படுவார்கள்.

அத்துடன் அரச வங்கிகளில் கடன் பெறும் போது வழங்கப்படும் வட்டி வீதம் குறைவாக பெறப்படும். விமான நிலையங்களிலும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இதேவேளை, திரட்டுப் படிவம் வழங்கியும் வரிப்பணம் செலுத்தாதவர்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனவே இவ்வாறான செயற்பாடுகளை வரிப்பணம் கட்டுபவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்புடை செய்திகள்

உயர் வருமானவரி செலுத்துபவர்கள்; இறைவரி திணைக்களத்தினால் கௌரவிப்பு

Related Posts