Ad Widget

யாழ்.மத்திய புகையிரத நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் பார்வையிடல்

யாழ்ப்பாணத்தில் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு வரும் மத்திய புகையிரத நிலையத்தின் புனரமைப்புப் பணிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சிங்ஹா ஆகியோர் பார்வையிட்டனர்.

குறித்த பகுதிக்கு இன்றைய தினம் (27) அதிதிகள் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கடந்தகால அசாதாரண சூழ்நிலை காரணமாக சேதமடைந்திருந்த நிலையில் புதிதாக மத்திய புகையிரத நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டுமாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் புனரமைப்புப் பணிகள தொடர்பில் அதிதிகள் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டனர்.

அத்துடன் புனரமைப்பு பணிகள் தொடர்பாக துறைசார்ந்தோருடன் அதிதிகள் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டனர்.

இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உனேஸ் பாருக், இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் முதன்மை செயலாளர் ஜஸ்ரின் மோகன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.

Related Posts