- Wednesday
- April 8th, 2026
தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை புலனாய்வு பிரிவின் தலைவரான நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவரை அரச புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். ஐந்து வருடங்களுக்கு பின்னர், சாம்பல்தீவில் வைத்து அவரை கைது செய்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது. சாம்பல்தீவு மற்றும் நிலாவெளியில் இடம்பெற்ற பல்வேறு கொலைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் பொலிஸாரினால் இவர்...
இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களுடைய உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் யாழ். சிறைக்குச் சென்ற இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் எஸ்.டி தட்சணாமூர்த்தி அவர்களுடன் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டனர். அதனையடுத்து உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என...
தமிழர் வரலாறுகளுக்கு தற்போது பாடப்புத்தகங்களில் மறைக்கப்பட்டு வருகின்றது. எனவே எதிர்வரும் சந்ததியினருக்கு எமது வரலாறுகள் அறிந்து கொள்வதற்கு தனிநூல் ஒன்றினை உருவாக்க வேண்டும் என உறுப்பினர் பரஞ்சோதியால் கொண்டுவரப்பட்ட பிரேரணை வடக்கு அவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வடக்கு அவையின் 20 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போதே உறுப்பினர் குறித்த பிரேணையினை முன்வைத்தார். மேலும் பிரேரணையில்...
யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினமற்று விளக்கேற்றியவர்களை கண்டறிவதற்கான முயற்சிகளில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் மற்றும் மாவீரர் தினம் போன்றவை பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டமை தொடர்பாகவே விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இதன்முதற்கட்டமாக 26ம் மற்றும் 27ம் திகதிகளில் பல்கலைக்கழகத்திற்கு வந்து சென்ற மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள்...
சுன்னாகம் அனல் மின்நிலையத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கோ அல்லது வடக்கில் புதிதாக வேறு அனல் மின்நிலையங்களைத் தாபிப்பதற்கோ மத்திய சுற்றாடல் அதிகாரசபை அனுமதி வழங்கக்கூடாது என வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வடக்கு மாகாணசபையில் சமர்ப்பித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (04.12.2014) வடக்கு மாகாணசபையின் 20ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை மண்டபத்தில்...
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவ யாருக்கு என்பது தொடர்பில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினர் ஒர் ஊடக அறிக்கையினை எமது செய்திப்பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். அவ் செய்திகுறிப்பில் .... நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு போட்டியிட இருக்கும் கட்சிகளில் பெரும்பாண்மை கட்சியை சேர்ந்த எதிர்க்கட்சியின் பொதுவேட்பாளர் மைத்திரிபா சிறிசேன குழுவினரையும், ஆளும் ஐக்கிய மக்கள்...
தேநீர் அருந்துவதைக் குறைக்குமாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசாவிற்கு முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் அறிவுரை வழங்கியுள்ளார். வடக்கு மாகாண சபையின் அமர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு தடை போடப்பட்டமை தொடர்பில் கடந்த அமர்வில் எதிர்க்கட்சித்தலைவர் கொண்டுவந்த கவனயீர்ப்புப் பிரேரணைக்கு சுகாதார அமைச்சரால் முழுமையான விளக்கம் வழங்கப்பட்டது....
நாட்டின் தேசிய இனமான தமிழ் மக்களுக்காக உண்மையான உணர்வுகளோடு போராடி மரணித்த மாவீரர்களையோ, தியாகத்திற்கு உரித்தான போராளிகளையோ தேர்தல் பிரசாரங்களின்போது கொச்சைப்படுத்தவோ, அதை ஒரு கருப்பொருளாகக் கொள்ளவோ வேண்டாம் என மேல் மாகாண சபையின் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் சண்.குகவரதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மொறட்டுவ பல்கலைக்கழக பழைய மாணவர்களுடனான சந்திப்பில் 'இன்றைய சூழலில் ஜனாதிபதி...
அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வடக்கு மாகாண சபையிலும் தனித்து இயங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இன்னும் அரை மணி நேரத்தில் கூடவுள்ள வடக்கு மாகாண சபை பெரும் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நேற்றைய கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத்...
இன்று நடைபெறும் வடமாகாண சபையின் 20 ஆவது அமர்வில் 2014 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு (குறைநிரப்பு ஏற்பாடுகள்) நியதிச் சட்டமும் 2015 ஆம் ஆண்டுக்கான நிதிக் கூற்றும் முதலமைச்சரால் சபையில் முன்வைக்கப்பட்டு அவை சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன் கடந்த மாகாண சபை அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவரால் கொண்டுவரப்பட்ட ஐஸ்கிறீம் உற்பத்திகள் தொடர்பான கவனயீர்ப்பு பிரேரணைக்கான...
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் வைபவம் கிளிநொச்சியில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு மோட்டார்...
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை 12பேர் கட்டுப் பணம் செலுத்தியுள்ளனர். நேற்றையதினம் மூவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதோடு, இதுவரை பத்து அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக் குழுக்கள் இவ்வாறு பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதேவளை கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் 7ம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. மேலும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம்...
மருதனார்மடம் இராமநாதன் கல்லூரிக்கு அடுத்த ஆண்டு மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்ப கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் கல்லூரி மேம்பாடு தொடர்பில் நேற்றய தினம் (03) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கல்லூரி வளாகத்தில் சேர்.பொன் இராமநாதனின்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அழகுபடுத்தி செழுமைபடுத்தும் வகையில் வரையப்படும் ஒவியங்களை அமைச்சர் நேரில் பார்வையிட்டார். யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அமைச்சர் அவர்கள் நேற்றய தினம் (03) விஜயம் மேற்கொண்டிருந்தார். புகையிரத நிலையத்தை அழகுபடுத்தி செழுமைப்படுத்தும் வகையில் ஒவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதனிடையே ஒவியருடனும் அமைச்சர் அவர்கள் கலந்துரையாடினார்....
மக்கள் அதிக முதலீடு செய்வதற்கான வழிகளை ஊடகங்கள் செய்வதில்லை என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா புதன்கிழமை (03) தெரிவித்தார். இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் முதலீட்டு ஊக்குவிப்பு கருத்தரங்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 இந்திய மீனவர்களும் தங்களை விடுவிக்கக்கோரி, புதன்கிழமை (03) காலை தொடக்கம் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பாக மூர்த்தி தொடர்ந்து கூறுகையில், உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை சந்தித்த போது, தங்களை விடுவிக்கும் திகதியை அறியும்...
கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை அடுத்து, அப்போதைய பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவை இந்த அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது. அவருக்கு நடந்தவற்றை விட பல மடங்கு அதிகமானவை தனக்கு நடக்கும் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களை, நேற்று புதன்கிழமை கொழும்பு –...
ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்தினால் உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்படும் அதிக இலஞ்சம் பெறும் நாடுகளின் பட்டியலின் 2014ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தலில் இலங்கை 85ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 175 நாடுகளை மையப்படுத்தியே 2014ஆம் ஆண்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 85ஆவது இடத்தில் இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிரண்டும் இடம்பிடித்துள்ளன. உலக வங்கி மற்றும்...
ஜனாதிபதி தேர்தல் பணிகளில் ஈடுபடவிருக்கின்ற அரச உத்தியோகஸ்தர்களின் தபால் மூல விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை, இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இந்த திகதி எக்காரணத்தைக் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது என்றும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் வாக்களிப்பு விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் என்றும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நிறுவப்பட்டிருந்த இராமநாதன் சிலை நேற்று இரவோடு இரவாக வெளிக் கேற்றினைப் பூட்டிவிட்டு பைக்கோ மூலமாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. அரசியல் பின்புலம் காரணமாகவே அது இரவோடிரவாக அகற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. எனினும் குறித்த பாடசாலையின் அதிபர், வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளர், பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோரின் முன்னிலையில் இந்தச் சிலை நேற்றிரவு அகற்றப்பட்டது....
Loading posts...
All posts loaded
No more posts
