இந்திய மகப்பேற்று வைத்திய நிபுணர் யாழ்.வருகை

சென்னை காமாட்சி ஞாபகார்த்த வைத்தியசாலையின் சிறப்பு மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார். (more…)

மக்களிடமிருந்தே ஆளும் உரிமை கிடைத்தது என்பதை மஹிந்த மறந்துவிடக்ககூடாது! – மாவை

"அரசிடம் இறைமை இல்லை. அது மக்களிடம் தான் இருக்கின்றது. அந்த இறைமையை மக்கள் கொடுக்காமல் இருந்தால் அவர்களை ஆளும் உரிமை அந்த அரசுக்கு இல்லை. அந்த அடிப்படைக்கோட்பாட்டின் பிரகாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட எமது இறைமையை நாம் யாருக்கும் கொடுக்கவில்லை. (more…)
Ad Widget

போதையில் குழப்பம் விளைவித்தவருக்கு விநோத தண்டனை

இளவாலை பகுதியில் மதுபோதையில் வீதியால் சென்று வருபவர்களுடன் அநாகரீகமாக நடந்துகொண்ட ஒருவரை, நீதிமன்ற வளாகத்தில் சமூதாய வேலையுடன் கூடிய சமூதாய சீர்திருத்த பணியை 150 (more…)

தேசியப் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டமைப்பு இதயசுத்தியுடன் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதயசுத்தியுடன் செயற்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார். (more…)

சி.வி.யை அறிந்தவர்கள் இருவரே!, இந்திய துணைத் தூதுவர்

மாணவர்களுக்கு தங்கள் பாடத்திட்ட கல்வியுடன் பொது அறிவு மிகவும் அவசியமாகவுள்ளதாக யாழ்.இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார். (more…)

முன்னாள் போராளி சுட்டுக்கொலை

மன்னார் வெள்ளாங்குளம் சேவலங்கா கிராமத்தில் நேற்று இரவு 8.30 மணியளவில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் போராளி ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். (more…)

சுன்னாகத்தில் காணாமற்போனவர் மீண்டு வந்த அதிசயம்!

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் காணாமல்போன ஒருவர் தொடர்பில் அம்பாந்தோட்டை நீதிமன்றத்திலிருந்து உறவினர்களுக்கு வந்த ஒரு கடிதத்தால் சுன்னாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. (more…)

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் மரநடுகை மாதம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை (11.11.2014) வடமாகாண மரநடுகை மாதம் கொண்டாடப்பட்டது. (more…)

நாடு முழுதும் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்?

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (12) மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அனைத்து பிரதேசங்களிலும் மாலையிலும் இரவிலும் சீரான அத்துடன் குளிரான காலநிலைக்கு சாத்தியம் நிலவும். (more…)

“முகச்சீராக்கல் சிகிச்சை தொடர்பில் விழிப்புணர்வு வேண்டும்” – விசேட வைத்திய நிபுணர் ப.சத்தியகுமார்

முகச்சீராக்கல் சிகிச்சை செய்வதில் மக்களுக்கு விழிப்புணர்வுகள் இல்லாத காரணத்தால், இந்த சிகிச்சை தொடர்பில் அவர்கள் ஆர்வமின்றி உள்ளனர் என்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பல், முகச்சீராக்கல் விசேட வைத்திய நிபுணர் ப.சத்தியகுமார் இன்று தெரிவித்தார். (more…)

தாயகம் திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழ் அகதிகள்

இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தாயகம் திரும்புவதற்கு விரும்புவதாக இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் நிறுவுனர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்தகிள் தெரிவிக்கின்றன. (more…)

மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவருக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தயாராம்!

தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல்முறையீடு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பொதுமன்னிப்பு வழங்கத் தயாராக இருக்கிறார் என 'இந்து' செய்தி வெளியிட்டுள்ளது. (more…)

ஆட்சி மாற்றம் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குக் கூடத் தீர்வைத் தராது!

ஆட்சி மாற்றமானது தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குக் கூட தீர்வைத் தராது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எந்த ஜனாதிபதி வேட்பாளராவது தாம் ஆட்சிக்கு வந்தால் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என உறுதிமொழி வழங்க முன்வருவார்களா எனவும் கேள்வியெழுப்பியுள்ளது. (more…)

ஊடகவியலாளன் என்பவன் ஓர் தகவல் களஞ்சியமாக இருக்கவேண்டும் – தவராசா

ஏறத்தாழ இன்றிலிருந்து 6000 வருடங்களுக்கு முன்புதான் இந்த எழுத்து என்பது பல இடங்களில் மனிதனினால் முதல் முதல் பதியப்பட்டதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த எழுத்தை என்றைக்கு மனிதன் ஆரம்பித்தானோ அன்று தொடக்கம் தன்னுடைய அந்த அறிவை, (more…)

வெளிநாடுகளிலிருந்து தாயகத்திற்கு திரும்பும் மக்களின் பயண அனுமதி தொடர்பில் விரைவில் தீர்வு

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தாயகத்திற்கு திரும்பும் போது அவர்களுக்கான பயண அனுமதியில் நடைமுறைப்படுத்தப்படும் தடைதொடர்பில் அரசுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (more…)

கொழும்பில் அனந்தியைப் பின்தொடர்ந்த புலனாய்வாளர்கள்! – சுரேஷ் எம்.பி

வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனை புலனாய்வாளர்கள் நேற்று முன்தினம் பின்தொடர்ந்தனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். (more…)

கிளி­நொச்­சியில் மாங்­கல்­யத்­துடன் வாழும் பெண்­களை வித­வைகள் என்­கி­றாரா அரி­ய­நேத்­திரன் – அஸ்வர் எம்.பி.

கிளி­நொச்சி மாவட்­டத்தில் மாங்­கல்­யத்­துடன் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்ற பெண்களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பி. அரி­ய­நேத்­திரன் வித­வைகள் என்று கூறு­கி­றாரா என ஆளும் கட்சி எம்.பி. யான ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று முன்தினம் பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பினார். (more…)

பழிவாங்கல் ஆரம்பம்? ரத்தன தேரரின் முகநூல், மின்னஞ்சல் முடக்கம்!

ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரரின் முகநூல் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு தென்பகுதியில் சந்தை வாய்ப்பு

வடமாகாணத்திலுள்ள நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு, தென்பகுதியில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண போக்குவரத்து மீன்பிடி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். (more…)

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதல் வழக்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில், கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக பொதுமக்கள் தாக்கல் செய்த வழக்கை, எதிர்வரும் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மல்லாகம் நீதவான் சி.சதீஸ்தரன் நேற்று செவ்வாய்க்கிழமை (11) உத்தரவிட்டார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts