- Saturday
- August 2nd, 2025

'அமைச்சர்கள் நாட்டுக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும் மக்கள் சேவையின் போது குற்றச்செயல்கள், ஊழல் மோசடிகளில் ஈடுபடுவர் மீது அவர் அமைச்சராக இருந்தாலும் அவருக்கு எதிராக பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் உறுதியான கொள்கையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதிதாக நியமனம் பெற்ற அமைச்சர்கள் மக்கள் நம்பிக்கையை வெல்லக்கூடியவர்களாகவும், மக்களுக்கு முன்மாதிரியாக செயற்படக்கூடியவர்களாகவும்...

யாழில் எட்டு லட்சம் ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு ஒருவர் 35 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, யாழ். ஊரெழுவை சேர்ந்த ஒருவருக்கு நேற்று திங்கள்கிழமை காலை தொலைபேசி அழைபொன்று வந்துள்ளது. தாம் குறித்த ஒரு தொலைபேசி நிறுவனம் ஒன்றில் இருந்து கதைப்பதாகவும் எமது நிறுவனத்தால் நீங்கள் அதிஸ்டசாலியாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் எனவும்...

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தை சற்று நேரத்திற்கு முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். ஏயார் இத்தாலியா விமானத்தின் மூலம் பரிசுத்த பாப்பரசர் இலங்கை மண்ணை வந்தடைந்தார். பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி பாரியார், கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன்...

யாழ்ப்பாணம், கற்கோவளம், தபால்பெட்டி சந்தியைச் சேர்ந்த 30 வயதான தாயொருவரையும் அவரது நான்கு வயது மகளையும் காணவில்லை என அவர்களின் உறவினர்கள், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (12) முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர். பிரதாப் ஜெனிஸ்ரலா விஜயகுமார் மற்றும் அவரது மகள் பிரதாப் சரணியா ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் என்று பொலிஸ்...

ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 87 நிறுவனங்கள் கடந்த வருடம்; (2014) பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட தொழில் திணைக்கள பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எமது திணைக்கள அதிகாரிகள் கடந்த 2014ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் சென்று, சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு...

கிளிநொச்சி, கரடிப்போக்கு சந்தியில் திங்கட்கிழமை (12) மதியம் இடம்பெற்ற விபத்தின் போது, வடமாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கரடிப்போக்குச் சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டு, வீதிக்கு வரும்போது, கன்ரர் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது....

புதிதாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தை வெளியில் இருந்தே ஆதரிப்பதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முடிவு செய்திருக்கின்றது. இது தொடர்பில் அக்கட்சி விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நடந்திருக்கும் ஆட்சி மாற்றத்திலும் எமது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆக்கபூர்வமான திட்டங்கள் தொடர வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். தமிழ்...

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியமைக்கு எதிராக முல்லேரியா பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம், திங்கட்கிழமை (12) அழைப்பாணை விடுத்தது. சோலங்காரச்சியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள்...

ஆர். சம்பந்தனின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த குழுவினர் இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளனர்.இன்று பகல் 12 மணி முதல் ஒரு மணி 30 நிமிடம் வரையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இந்த சந்திப்பின் போது, தேசிய...

இன்று மாலை 6.30 மணிக்கு இலங்கை சனாதிபதி செயலகத்தில் 27 பேர் கொண்ட இலங்கையின் புதிய அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. 1) ரணில் விக்கிரமசிங்க- கொள்கை அமுலாக்கம் 2)ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம் 3)மங்கள சமரவீர- வெளிவிவகாரம் 4)கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர் 5)ஜோசப் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் 6)காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு...

தமிழ் மக்களின் துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சரியான செய்தியொன்றை வழங்கியுள்ளனர் என வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாகரஞ்சினி ஐங்கரன் திங்கட்கிழமை (12) அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள், முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியோரங்களில் வீசப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 'வடக்கில் எமக்கு புதிய சூரியன்' எனும் தலைப்பிடப்பட்டிருந்த இந்த துண்டுப் பிரசுரங்களில் விடுதலைப் புலிகள் இயங்கத்தின் உத்தியோகபூர்வ சின்னம் மாத்திரமே பொறிக்கப்பட்டிருப்பததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இவ்வாறு...

பாப்பரசரின் இலங்கைக்கான வருகையை முன்னிட்டு நாளை மறுதினம் 14 ஆம் திகதி அரச வங்கி பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 14 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெறும் பிரதான தேவஆராதனையை முன்னிட்டு அன்றைய தினம் விசேட விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்ச அரசால் குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் குடியுரிமை வழங்கி புதிய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். யுத்தம் நடைபெற்ற காலத்தில் 20 வருடங்களாக ஆட்சியில் இருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமே பாதுகாப்பு அமைச்சு இருந்து. கட்சிக்குள்ளும் வெளியிலும் தமக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்து...

யாழ்ப்பாணம் மற்றும் வடக்கில் எந்தவொரு அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என, தான் மகாநாயக்க தேரரிடம் தெரியப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நேற்று கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போது அந்தப் பகுதியில் அமைதி நிலவுவதாகவும் இதுகுறித்து காலை யாழ்ப்பாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்....

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்விலும் மகிந்த தரப்பில் இருந்து பலர் மைத்திரிபாலவுக்கு ஆதரவாக கலந்துகொண்டனர் என்று தெரியவருகிறது.

வடக்கு வாழ் மக்கள் யாழ்தேவி ரயிலையும் ரயில் பாதையையும் அமைத்துத் தருமாறு கோரவில்லை எனவும், அவர்கள் அரசியல் அதிகாரத்தை கோரி நின்றதாகவும் முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரவித்துள்ளார். கடந்த 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தோல்வியைத் தழுவியமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மக்களுக்கு...

புனித பாப்பரசர் பிரான்ஸிஸின் இலங்கைக்கான விஜயத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (13) முதல் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணத்திலுள்ள அனைத்து சாலைகளிலிருந்தும் மடுவுக்கு செல்லும் பஸ் சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய முகாமையாளர் எஸ்.ஏ.அஸர் திங்கட்கிழமை (12) தெரிவித்தார். இலங்கைக்கு செவ்வாய்க்கிழமை (13) வருகை தரும் புனித பாப்பரசர் பிரான்ஸிஸ், புதன்கிழமை (14)...

அமைச்சுப் பதவி எதுவும் தேவையில்லை, வெளியிலிருந்தே தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். - இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார் என அறிய வருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்துப் பேசியபோதே சம்பந்தன் அவருக்கு இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருபவை வருமாறு:- தமிழ்த்...

வடமராட்சி, நெல்லியடி சந்தியில் அமைந்துள்ள தேசிய லொத்தர் விற்பனை கடை ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இனம்தெரியாதோரால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். இதன்காரணமாக, கடையிலிருந்த லொத்தர்கள், இதர பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்ததுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நெல்லியடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

All posts loaded
No more posts