- Thursday
- July 24th, 2025

வடமராட்சிகிழக்கில் மணல்ஏற்றும் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு இயங்கும் 1000 கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மணல் சேவையில் ஈடுபடும் வடமராட்சி கிழக்கு மக்கள் மருதங்கேணி பிரதேச செயலகம் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது கலந்து கொண்டவர்கள் இருபது வருடங்களுக்கு மேலாக மணல் விநியோகத்தினையே தமது வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வருவதாகவும் தற்போது கடந்த 5 வருடங்களாக...

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் ஓட்டோ - தனியார் பஸ் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பிரதான வீதியும் முதலாம் குறுக்குத் தெருவும் இணையும் சந்தியில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பொலநறுவையை சேர்ந்த பிரசந்த (வயது 28), நுவரேலியாவைச் சேர்ந்த றொசாந் (வயது 35) ஆகியோரே மரணமாகினர். இருவரும்...

2015 - 2016 ஆம் ஆண்டுகளுக்கான ஆங்கில மொழி மூலமான இந்தியாவின் காந்தி புலமைப்பரிசில் கற்கை நெறிக்கு இலங்கை உயர் கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 22 வயதிற்குட்பட்ட தகுதி வாய்ந்த இலங்கை மாணவர்களிடமிருந்து மேற்படி விண்ணப்பங்களை உயர் கல்வி அமைச்சு அதன் இணையத்தளத்தினூடாக கோரியுள்ளது. எனவே விண்ணப்பங்களை www.mohe.gov.lk எனும் இணையத்தளத்தினூடாக பிரவேசித்து பெற்றுக்...

இதுவரையில் மின்கட்டண நிலுவை செலுத்தாமல் இருப்பவர்கள் தங்களுடைய மின்கட்டண நிலுவையை சனிக்கிழமை (31)ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் யாழ்.பிரதேச பொறியியலாளர் ச.ஞானகணேசன் வெள்ளிக்கிழமை (30) கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மின்கட்டண நிலுவையை செலுத்தாமல் பலர் உள்ளனர். அவர்கள் தங்களுக்குரிய மின்கட்டணத்தை...

அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் இலங்கை வரவுள்ளார். இவர் இலங்கையில் தங்கியிருக்கும் போது, போருக்குப் பிந்திய நல்லிணக்கம், மற்றும் பெர்றுப்பக் கூறல் தொடர்பாக கொழும்பில், ஆரம்பக் கட்டப் பேச்சுக்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்தில், வடக்கு...

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 28ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்களே நடத்தப்படவுள்ளன. 2011ஆம் ஆண்டு வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட போது, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், இந்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்கள் இடைநிறுத்தி...

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து புதிய அரசாங்கம் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சாதாரண மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய திட்டங்களை அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் புதிய வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகளை வடபகுதியைச் சேர்ந்த மக்களும் பொதுவாக வரவேற்றுள்ளனர். எனினும், அவற்றில் குறைபாடுகள் இருப்பதாகவும் சிலர் தெரிவித்தனர். ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தன்படி, அரசாங்கத்தின் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின்...

இலங்கையின் 44 வது தலைமை நீதியரசராக கே.ஸ்ரீபவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஒய்வு பெற்றுள்ள நிலையிலேயே கே. ஸ்ரீபவன் புதிய தலைமை நீதியரசராக நியமனம் பெற்றுள்ளார். யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற கே. ஸ்ரீபவன் 1974 ம் ஆண்டு சட்டக் கல்லூரியில் இணைந்து...

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளையும் குறைப்பது தொடர்பில் ஆராய்வதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் கோதுமை மாவின் விலை 12 ரூபா 50 சதத்தினால் குறைக்கப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சங்கத்தின் தலைவர் கூறினார். இதேவேளை முச்சக்கரவண்டி கட்டணங்களை 10 சதவீதத்தாலும்,...

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நுழைவாயில் மீது புதன்கிழமை (28) நள்ளிரவு, இனந்தெரியாதோரால் பெயின்ட் ஊற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது. பழைய மாணவர்களின் நிதியுதவியில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயில் மீதே இவ்வாறு பெயின்ட் வீசப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் கறுப்பு நிற வர்ணம் தீட்டப்பட்டிருந்த நுழைவாயிலுக்கு நீலம் மற்றும் வெள்ளை...

இலங்கையில் பிறந்த அனைவரும் இரட்டை பிரஜாவுரிமை பெறமுடியுமென நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டுகான இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முறையான ஒரு மதிப்பீட்டை தொடர்ந்து 5 இலட்சம் ரூபாய் செலுத்தி இரட்டை பிரஜாவுரிமையை பெறமுடியும் எனவும் இலங்கையில் 10 மில்லியன் டொலர் முதலீடு செய்யக்கூடிய, இலங்கையில் வதிவிட...

இலங்கையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மென்பொருள் பல்தேசிய நிறுவனமாகிய WSO2 இன்று தனது கிளை நிறுவனத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்துள்ளது. இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்ட ஊடக அறிக்கை இங்கே

எதிர்வரும் 31.01.2015 காலை சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை 'பல்கலைக்கழகப் பேரவையைத் தூய்மைப்படுத்துதல்' என்ற கருப்பொருளில் பல்கலைக்கழக முன்றலில் போராட்டத்தினை மேற்கொள்வதென யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது. இப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல்கலைக்கழகப் பேரவையைத் தூய்மைப்படுத்தும் முயற்சிக்குத் தங்கள் ஒத்துழைப்பினை நல்குமாறு பல்கலைக்கழக சமூகத்தினரையும் பல்கலைக்கழக நலனில்...

புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இடைகால வரவுசெலவு திட்டம் 2015ல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை விபரங்கள் கீழ்வருமாறு... அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் 10 000 ரூபாவாக அதிகரிப்பு : அதில் 5000.00 ரூபா பெப்ரவரி மாதமும் மிகுதி 5000.00 ரூபா எதிர்வரும் ஜூலை மாதமும் அதிகரிக்கப்படும். இதற்கமைய அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் இவ்வாண்டு 47 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது....

யாழ். கற்கோவளம் புனிதநகர் பகுதியில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி இடத்தை சேர்ந்த நகுலன் சுஜாதா (வயது 25), சதீஸ் உசாந்தினி (வயது 22), திருச்செல்வம் சதீஸ் (வயது 26) ஆகியோரே படுகாயமடைந்தனர். காணிப் பிணக்கு தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே...

கிளிநொச்சியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் இரண்டு அமைக்கப்படவுள்ளன. அதன்மூலமாக சுமார் ஒரு லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது. தேசிய அபிவிருத்தி வங்கியின் உதவியில் சுமார் 3.3 பில்லியன் ரூபா செலவில் இந்த இரண்டு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. கிளிநொச்சி வள்ளி முனை,புலோப்பளை ஆகிய இடங்களிலேயே காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

பாடசாலைகளின் தேவைகளுக்காக மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதனை உடன் அமுலுக்குவரும் வகையில் தடைவிதிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலை அபிவிருத்திக்காக பழைய மாணவர் சங்கம், வகுப்பு நலன்புரி சங்கம் ஆகியவற்றினூடாக அறவிடப்படும் அனைத்து அறவீடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்று நிருபம் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அடுத்த தேர்தலை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமாகவே இருக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுபினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எரிவாயு, பெற்றோலியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. ஆகவே சாதாரண மக்களுக்கு மகிழ்ச்சியைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய வரவு செலவுத்திட்டம். முன்னைய அரசுகள் மக்கள் மீது சுமத்திய வரிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இந்த...

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆறுமுகம் நடராஜன் நேற்று வியாழக்கிழமை (29.01.2015) வடமாகாண விவசாய அமைச்சரின் அலுவலகத்துக்கு விஜயம் செய்து விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுடன் சம்பிரதாய பூர்வமான சந்திப்பை மேற்கொண்டுள்ளார். இதன்போது அமைச்சர் பொ.ஐங்கரநேசனுடன் அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சிவபாதம்,வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர்...

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 43 ஆவது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நேற்று நள்ளிரவு 12.00 மணியுடன் தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். புதுக்கடை, உயர் நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று முற் பகல் இடம்பெற்ற பிரதம நீதியரசரின் சம்பிரதாயபூர்வமான ஓய்வுபெறும் வைபவத்திலேயே கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க இதனை தெரிவித்தார். 2013 ஜனவரி...

All posts loaded
No more posts