Ad Widget

இந்துக் கல்லூரி நுழைவாயில் மீது பெயின்ட் வீச்சு

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நுழைவாயில் மீது புதன்கிழமை (28) நள்ளிரவு, இனந்தெரியாதோரால் பெயின்ட் ஊற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது.

jaffna-hindu

பழைய மாணவர்களின் நிதியுதவியில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயில் மீதே இவ்வாறு பெயின்ட் வீசப்பட்டுள்ளது.

தங்கம் மற்றும் கறுப்பு நிற வர்ணம் தீட்டப்பட்டிருந்த நுழைவாயிலுக்கு நீலம் மற்றும் வெள்ளை நிற பெயின்ட் ஊற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நிறங்களாக நீலம் மற்றும் வெள்ளை நிறம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts