- Thursday
- August 21st, 2025

கைது செய்யப்பட்டு காணாமற்போன லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி முன்னிலை சோஷலிசக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமொன்று யாழ். நகரில் இன்று புதன்கிழமை (25) நடத்தப்பட்டது. 'தருவதாக கூறிய ஜனநாயகம் எங்கே?', 'லலித், குகன் ஆகியோரை உடன் விடுதலை செய்', போன்ற வாசகங்கள் ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். லலித்,...

இலங்கை- தமிழக மீனவ பிரதிநிதிகளிடையே சென்னையில் நடந்த 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையில், தமிழக மீனவர்கள் முன்வைத்த 7 கோரிக்கைகள் குறித்து மே மாதத்தில் முடிவை அறிவிப்பதாக இலங்கை மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய - இலங்கை மீனவர்களுக்கிடையேயான 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை ஆணையர்...

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை இலங்கைக்கு வரவழைப்பதற்கு, நீதிமன்ற உத்தரவை நாடியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். திவிநெகும திணைக்களத்தின் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே, அவரை இலங்கைக்கு வரவழைக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதன் பின்னர் முன்னாள் அமைச்சர்...

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பது, ஏப்ரல் 02ஆம் திகதி முதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு பயணிப்பது, மார்ச் மாதம் 21ஆம் திகதி முதல் தடை செய்யப்படும் என்று பொலிஸார் ஏற்கெனவே தெரிவித்தனர். எனினும் இத்திட்டம்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனாவிற்கு சென்றுள்ளனர். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த பயணத்தில் இந்தியா சென்றது போன்று இம்முறையும் பயணிகள் விமானத்தில் சீனா நோக்கிச் சென்றுள்ளார். யு.எல்.868 என்ற சாதாரண பயணிகள் விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று (25) பகல் 1.30 அளவில் சீனாவின் தலைநகர் பீஜிங்...

தன்னிடம் 5 வாகனங்களே உள்ளதாகவும் ஆனால் அதற்கு மேல் வாகனங்கள் வைத்திருப்பதாக பொய் பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 3 மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆறு வாகனங்களும் 213 பொலிஸ், இராணுவ வீரர்களும் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு நீதிமன்ற தீர்ப்பு படி குறைந்த வாகனமும்...

இலங்கை அரசியல் யாப்பில் திருத்தங்களை செய்யும் முகமாக 19வது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூல ஆவணம் இன்று பிற்பகல் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த 19வது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூல ஆவணம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு உள்ள அதிகாரங்களை குறைத்தல், அமைச்சரவை-பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரம் அளித்தல், சுயாதீன...

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள், வடமாகாண மக்களிடையே குறைவாகவே காணப்படுகின்றது. புற்றுநோய் பற்றிய அறிகுறிகள் தோன்றினாலும் அதை உடனடியாகச் சென்று வைத்தியர்களுக்கு காட்ட நாங்கள் தாமதிக்கின்றோம். அதனால் நோய் நன்றாக முற்றிப்போகின்றது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினர். யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை...

பனைசார் உற்பத்தியாளர்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காகவும் எமது உற்பத்திகளுக்கு நல்லதொரு மதிப்பை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே திங்கட்கிழமை (23) வளலாயில் நடைபெற்ற காணி கையளிக்கும் நிகழ்வில் பனை ஓலையில் வடிவமைக்கப்பட்ட மாலைகள் போடப்பட்டதாக யாழ்.மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.மோகனேஸ்வரன், செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார். வளலாய், வசாவிளான் ஆகிய பகுதிகளில் விடுவிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் மீளக்கையளிக்கும் நிகழ்வு...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் சத்திர சிகிச்சை பிரிவில் சில குறைபாடுகள் இருப்பதாகவும் அதனை நிவர்த்தி செய்தால் வடமாகாண மக்களுக்கு சிறந்த சிகிச்சையை வழங்க முடியும் என நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் சஞ்ஜீவ கருசிங்கே தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நீண்ட காலத்துக்கு பின்னர் கடந்த 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்...

மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பழமைவாய்ந்த மூல விக்கிரகம் உட்பட பல விக்கிரகங்கள், நேற்று திங்கட்கிழமை (23) இரவு மாயமாகியுள்ளதாக ஆலய வழிபடுவோர் சங்க உறுப்பினர் ஒருவர், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். மருதடி விநாயகர் ஆலயம், கடந்த 2004ஆம் ஆண்டு புனருத்தானம் செய்யப்பட்டு 250 மில்லியன் ரூபாய் செலவில்...

முன்னாள் ஜனாதிபதியின் கையெழுத்து மற்றும் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட காணி உறுதிகளே, யாழ். மாவட்டச் செயலகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (24) வழங்கப்பட்டன. யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 190 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (24) வழங்கப்பட்டன. அந்த காணி உறுதிப்பத்திரங்களில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு ஜனாதிபதி என்பதன் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் மேற்கொள்ளப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள், பிரதியமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கு மேலதிகமாக மேலும் சில அமைச்சுக்கள், பிரதியமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவிருப்பதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 100 நாட்கள் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும்...

உலக சுகாதார புற்றுநோய் தினத்தை மாகாண மட்டத்தில் கொண்டாடும் முகமாக இன்று காலை 7.30 மணிக்கு விழிப்புணர்வு நடைபவனி யாழ்.நகரில் நடைபெற்றது. யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்து ஆரம்பித்த நடைபவனி யாழ்.போதனா வைத்தியசாலை வீதி,கே.கே.எஸ் வீதி,ஆரியகுளம் சந்தி வேம்படிச் சந்தி,யாழ்.மத்திய கல்லூரி வீதி ,ஊடாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தை சென்றடைந்தது.

வளலாய் பகுதியில் இடம்பெற்ற காணிகளை மீளக் கையளிக்கும் நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட விருந்தினர்களுக்கு பனையோலையால் செய்யப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டன. வளலாய், வசாவிளான் ஆகிய பகுதிகளிலுள்ள 430 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீளக்கையளிக்கும் நிகழ்வு, வளலாய் பகுதியில் திங்கட்கிழமை (23) நடைபெற்றது. ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க...

கொடுப்பதை ஏற்றுக்கொண்டு வாழ வேண்டுமென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், திங்கட்கிழமை (23) தெரிவித்தார். வளலாய், வசாவிளான் பகுதியில் விடுவிக்கப்படும் 430.6 ஏக்கர் காணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வளலாய் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தற்போது தான் ஆரம்பமாகியுள்ளது. சில தடங்கல்கள்...

கிளிநொச்சியை தலைமை அலுவலமாகக் கொண்டு இயங்கும் மனிதாபிமான புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கான தேசிய சங்கத்தின் புதிய அலுவலக கட்டம், திங்கட்கிழமை (23) திறந்து வைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதார, கல்வி, சுயதொழில் செய்வதற்காக உதவிகளை வழங்கிவரும் இந்த அமைப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்களையும் வழங்கி வருகின்றது. போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அமைப்பு உதவி செய்து வருகின்றது. சமூக ஆர்வலர்கள் இணைந்து...

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சுத்திரவம் கலக்கப்பட்டமை தொடர்பில், அப் பாடசாலையின் கடமை நேர, இரு காவலாளிகளையும் சந்தேகத்தில் நேற்று (23) கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும் ஏழாலை மயிலங்காட்டு பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார்,...

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 54 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை அரசாங்கம் விடுத்த பணிப்புரையை அடுத்தே அந்த மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகம்- இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற உள்ள நிலையிலேயே 54 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இராமேஸ்வரத்தை சேர்ந்த 33 மீனவர்கள் கடந்த 21ஆம் திகதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இலங்கை...

தேசிய கீதம் தமிழில் பாடுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விரும்புகின்றார் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதகிருஸ்ணன் தெரிவித்தார். மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் 06 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திங்கட்கிழமை (23) திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இங்கு தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது....

All posts loaded
No more posts