- Monday
- September 22nd, 2025

"தமிழர்களைக் கொன்று குவித்து - அவர்களின் வாழ்விடங்களைத் தரைமட்டமாக்கி யுத்தவெற்றி என்று உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேசத்திற்கும் மஹிந்த அரசு பறைசாற்றியது. அப்போது வாயை மூடிக்கொண்டு அவர்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் இன்று வடக்கு, கிழக்கில் வெற்றிலை சின்னத்திலும், வீணை சின்னத்திலும் வாக்குக் கேட்டுவருகின்றார்கள்.இவர்களை தமிழ் மக்கள் விரட்டியடிக்கவேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாதாரண கோரிக்கைகள் குறித்து ஆராயப்படும் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தளை - நாவுல பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். நாட்டை பிளவுபடுத்தும் கோரிக்கைக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இந்தியாவும் உலக நாடுகளும் புரிந்து கொண்டு, அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து தென்னிலங்கை பத்திரிகைகள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களுக்கு இடையில் பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அது குறித்து...

கடற்படையினரால் பொன்னாலைப் பகுதியிலுள்ள கிணறுகளில் இருந்து அளவுக்கதிமாக நன்னீர் எடுக்கப்படுவதால் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களின் கிணறுகள் உவர்நீராக மாற்றமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடற்படையினர் 24 மணிநேரமும் பாரிய பவுஸர்களில் நன்னீர் எடுத்துச் செல்வது தொடர்பாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் என்பன அறிந்திருந்தும், இதனை கட்டுப்படுத்துவதற்கு எதுவித...

ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக, தனியார் கம்பனிகளில் தொழில் புரிவோருக்கு கடமை நேர விடுமுறை வழங்கப்படல் வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. கடமை நேர விடுமுறையானது தூரம் மற்றும் தேர்தல் நேரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு வழங்கப்படவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வளர்ச்சியை மட்டும் ஒரே நோக்கமாக கொண்டு இயங்குகின்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கலை ஆர்வலர்கள் மற்றும் பழைய மாணவர்களின் ஒன்றிணைவில் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த வருடம் சித்திரை 5ம் திகதி கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடாத்திய 'கீத நிருத்திய சிருங்கார்'...

நெல்லியடிக் கட்சிக் கூட்டத்தில் ஒரு பெரியவர் எழுப்பிய கேள்வியும், திரு. சுமந்திரன் அளித்த பதிலும்: கேள்வி: "சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டது சரியா? அதை இன்றும் நியாயப்படுத்துகின்றீர்களா?" திரு. சுமந்திரன்: " இந்தக் கேள்வி வரும் என்று தெரியும். இன்றுவரை நானும், சம்பந்தன் ஐயாவும் செய்தது சரியென்றே கூறுகிறேன். சம்பந்தன் ஐயா 1970களில் இருந்து...

நல்லூர் உற்சவ காலத்தில் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தருபவர்கள் இறுக்கமான ஆடைகளை அணியாது பண்பாட்டுடைகளுடன் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நல்லூர் உற்சவ காலத்தில் பல்இனத்தவர்களும் வருகை தருவது மட்டுமல்லாது நல்லூரின் புனிதத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டியதொன்று.ஆகவே இங்கு வருகை தருபவர்கள் இறுக்கமான ஆடைகளை அணிந்து வருவதால் நல்லூரின் புனிதத்தன்மைக்கு களங்கம் ஏற்படுகின்றன. எனவே கடந்த முறையும்...

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் உற்சவ காலத்தை முன்னிட்டு யாழ்.மாநகர சபை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்.மாநகர சபை ஆணையாளர் பிரணவநாதன் தெரிவித்துள்ளார். மாநகர சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆலயச் சூழலிலுள்ள பொதுமக்கள் உட்பட அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார். நல்லூர்க் கந்தன் உற்சவ கால முன்னேற்பாடுகள்...

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து போலிக்கடவுச்சீட்டை பயன்படுத்தி சுவிட்ஸர்லாந்துக்கு தப்பிச்செல்ல முயற்சித்த தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை, இந்திய பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், குறித்த நபர் தப்பிச்செல்வதற்கு போலி கடவுச்சீட்டை தயாரித்துக் கொடுத்தார்கள் என்ற குற்றஞ்சாட்டின் பேரில் இருவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, இதில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான விஞ்ஞாபனம், யாழ். மருதனார்மடம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொதுச்சந்தை வளாகத்தில் சனிக்கிழமை (25) மாலை வெளியடப்பட்டது. இதில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக்...

மக்கள் நலன்சார்ந்ததே எமது அரசியல் நிலைப்பாடாகுமெனவும் அதனடிப்படையிலேயே நாம் செயற்திட்டங்களை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். வடமராட்சி சக்கோட்டையில் நேற்றய தினம் (26) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

இலங்கை படையினரை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் கொண்டுசெல்வதற்கு நாங்கள் ஓருபோதும் அனுமதிக்க மாட்டோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜெனீவா அறிக்கை வெளியானதும், பகிரங்கப்படுத்தப்பட்டதும் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை முன்வைப்போம். நான் அறிந்தவகையில் குறிப்பிட்ட அறிக்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின்...

வடக்கு -கிழக்கு மக்கள் உதிரிக் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து 20 ஆசனங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கும் நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கவும் மக்கள் அனைவரும் ஒன்றிணையுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ். மாவட்ட தேர்தல் தொகுதிக்கான பரப்புரை கூட்டம் நேற்று முன்தினம் மருதனார்மடத்தில் நடைபெற்றது. அதில்...

'தமிழ் மக்களின் இன்றைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சரியான தலைமைகளை உருவாக்குவதற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதமேந்திப் போராடிய நாங்கள், ஆயுதமின்றி ஜனநாயக ரீதியில், நடைபெறறவுள்ள நடாளுமன்ற தேர்தலின் ஊடாக மீள்பிரவேசம் செய்துள்ளோம். எம்மை நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் நம்புகின்றோம்' என யாழ். மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்தது. யாழ்....

நாட்டை யுத்தத்தில் இருந்து மீட்டதா அல்லது நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டு சென்றதா நான் செய்த குற்றம்? - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ அம்பாந்தோட்டை - வலஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

காணாமல் போய் பின் 28 நாட்களின் பின்னர் உருக்குலைந்த சடலமாக மீட்கப்பட்ட 3 வயதான ஜெர்சிகா பாலியல் வன்புணர்வுக்குப் பின்னரே கொல்லப்பட்டார் என கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் ஜெர்சிகா என்ற இச்சிறுமி கடந்த ஜூன் 21 ஆம் திகதி நீர் நீர் வாய்க்காலுக்குக் குளிப்பதற்காக...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்மொழியப்பட்டுள்ள விடயங்களானவை இன நல்லுறவுக்கும், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாகும். இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:- கொடிய...

வட இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இழுபறியான நிலையில் இருப்பதனால், அதனை முழுமைப்படுத்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள். அதேநேரம், வடமாகாண சபை தேர்தலின் ஊடாக தங்களுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்த்து அவர்கள்...

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ்ஸின் மீது வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் நேற்று இரவு கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு சாலைக்கு சொந்தமான பஸ்ஸின் மீதே நேற்று இரவு 9 மணியளவில் கல்வீசப்பட்டுள்ளது. தாண்டிக்குளம் இராணுவ உணவகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இச்சம்பவத்தில்...

All posts loaded
No more posts