கொடிகாமம் விபசார விடுதியை நடத்த பாதுகாப்பு புலனாய்வாளர்கள் ஒத்துழைப்பு!!

கொடிகாமம் பகுதியில் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்ட விபசார விடுதி, பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடனேயே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது என சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் தெரிவித்தார். கொடிகாமம் விபசார விடுதியில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட அவ்விடுதியின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஆகிய மூவரும் இம்மாத முற்பகுதியில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிராக பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட...

காக்கைத்தீவு திண்மக்கழிவால் மக்களுக்கு வயிற்றோட்டம்

வலிகாமம் தென்மேற்கு, கல்லுண்டாய், காக்கைத்தீவு பகுதியில் தொடர்ந்து கொட்டப்படும் திண்மக்கழிவு, மலக்கழிவுகளால் ஆனைக்கோட்டை, நவாலி ஆகிய கிராமங்களில் வசிக்கும் சிறுவர்கள் உட்பட 55பேர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.றஜீவ் வியாழக்கிழமை (23) தெரிவித்தார். இதனையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரம் தொடர்பான அறிவூட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய...
Ad Widget

தமிழ் மக்களின் பலத்தை சிதறடிக்க சதி: சுமந்திரன்

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் குறித்த தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ள தருணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் போலியான வேறுபாடுகளை சந்தைப்படுத்தி, அவர்களின் பலத்தை சிதறடிக்க சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேசத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26) சட்டநாதர் வீதியிலுள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் காலை 9 மணிக்கு இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சமகால தேர்தல் தொடர்பாக ஆராயப்படவுள்ளது. இக்கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஊறணி பகுதியில் தலையில் காயங்களுடன் ஒருவர் மீட்பு

வல்வெட்டித்துறை ஊறணி பகுதியில் உள்ள பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து, தலையில் காயங்களுடன் மயங்கிய கிடந்த ஆண் ஒருவரை மீட்டு, ஊறணி பிரதேச வைத்தியசாலையில் வியாழக்கிழமை (23) அனுமதித்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு தலையில் இரத்தக்காயங்களுடன் மீட்கப்பட்டவர், அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய செல்லக்குட்டி என பொலிஸார் தெரிவித்தனர். இரவு 12 மணியளவில் வீதி...

பிரபாகரன் மரணம் தொடர்பில் நான் எந்தவொரு ஊடகத்துக்கும் செவ்வி வழங்கவில்லை – கருணா

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ததாகக் கூறும் செய்தி, நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானதாகும். இருப்பினும், அவரை எவ்வாறு கைது செய்தார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது. எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட பிரபாகரன், மஹிந்த ராஜபக்ஷவிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை மஹிந்த கடுமையாக தாக்கியுமுள்ளார் என அவரது ஆட்சியில் இருந்த...

வவுனியாவில் பலர் முன்னிலையில் இளைஞன் மீது கத்திக்குத்து!

வவுனியா, கண்டிவீதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் நின்ற இளைஞன் ஒருவர் மீது ஓட்டோவில் வந்த நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - வவுனியா, கண்டிவீதியில் பிராந்திய சுகாதார நிலையத்திற்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு...

வவுனியா அரச அதிபர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைக்கு விசாரணைக் குழு நியமிப்பு

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளதென வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் 32 ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இடம்பெற்றது. அதன்போதே அவைத் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வவுனியா...

கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்க வேண்டிய மூன்று விடயங்கள் குறித்து சம்பந்தனுக்கு சீ.வீ.கே.கடிதம்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மூன்று முக்கியமான விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என கோரி அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு 01) எமது 65 வருடகால இலக்கும் கோட்பாடுமான வடக்கு-கிழக்கு இணைந்து தாயகத்தில்...

தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து ஊழல்ளையும் நிறுத்துவோம்! கட்சிக்குள் பிளவு இல்லை!! – மஹிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிளவுபட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தனது தனிப்பட்ட நலன்களுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கைவிட விரும்பாததாலேயே புதிய கட்சியை ஆரம்பிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தனது முகப்புத்தகத்தில் மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியான நீங்கள் ஏன் பொதுத் தேர்தலில் போட்டியிடத்...

இலங்கை அரசுடன் இணைந்து இன அழிப்புக்குத் துணை போனவர்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பர்! – வி.மணிவண்ணன்

இலங்கையின் ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழ் இனத்தின் மீது காலத்திற்கு காலம் நடத்தப்பட்ட இன அழிப்புக்கு வெளிப்படையாகத் துணை போனவர்களை எப்போதும் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள். இதேவேளை பேச்சில் தமிழ்த் தேசியத்தை வைத்துக் கொண்டு செயற்பாட்டில் இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் இனத்தையே முடக்க நினைக்கிறது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. தமிழ்த்...

ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தீர்வு! ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு

இலங்கையின் சகல தரப்பின் இணக்கத்திற்கு அமைய ஒரே நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு மூலமே இனப்பிரச்சினைக்கான தீர்வு மேற்கொள்ளப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞானபனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக ஐ.நா.அமைப்பினால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை சம்பந்தமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் சகல தரப்புகளுடனும் பேச்சுவார்த்தைகளை...

நிலையான அரசாங்கத்தை அமைக்க மக்களின் பங்களிப்பு அவசியம்! – யாழில் அனுரகுமார திசாநாயக்க

விலை போகாத பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதுடன், நிலையான அரசாங்கத்தினை அமைப்பதற்கு இந்த தேர்தலில் மக்களின் பங்களிப்பு மிக அவசியமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் அங்கு...

16வயதிலே போராட சென்ற பெண் இன்று அரசியலில்! யார் இந்த கோகிலா!

கோகிலவாணி  ஆயுதப் போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்தவர். 16 வயதில் போராட்டத்தில் இணைந்து கொண்டவர். ஐக்கிய அமெரிக்கா நாடுகளின் சர்வதேச வருகையாளர் தலைமைத்துவ செயற்திட்டதில் (International Visitor Leadership Programme) பங்குபற்றியவர். 2014 நவம்பரில் இருந்து USAIDஇன் நிதி வசதியுடன் மீள் சுழற்சி காகித தொழிற்சாலை ஒன்றை அமைக்கும் பணியில் இணைந்து கொண்டுள்ளவர். தற்போது தமிழ்த்தேசயி மக்கள் முன்னணியில்...

கைவிரலை உடைக்க பார்த்தார், தாக்கவில்லை பிடித்து தள்ளினேன் : மஹிந்த

எனது கைவிரலை உடைக்க பாரத்தார். பாதுகாப்பதற்கே அவரை பிடித்து தள்ளினேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட் டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அங்கு வந்திருந்த ஒருவரை தாக்குதல் நடத்தியிருந்ததாக செய்திகள்...

அரசிலிருந்து கூண்டோடு வெளியேற தயாராகின்றனர் சு.க. அமைச்சர்கள்! – அனுமதியளிக்குமாறு மைத்திரியிடம் கோரிக்கை!!

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசிலிருந்து கூண்டோடு வெளியேறுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக ஜனாதிபதியிடம் அனுமதிபெறவும் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தைக்கூட்டி அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்வதற்கு ஒப்புதல் பெற்றுத்தருமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான யோசனை நேற்று மாலை ஜனாதிபதியிடம்...

யாழ். ஆயருடன் அநுரகுமார திஸநாயக்கா சந்திப்பு!

வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்கா இன்று வியாழக்கிழமை யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்தை சந்தித்தார். ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அநுரகுமாரவுடன் மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் சந்திரசேகரனும் கூட இருந்தார். இதேவேளை - மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட தலைமையத்தில் நடைபெறும்...

விதிமுறைகளுக்கு ஏற்ப பிரச்சாரங்களை மேற்கொள்ளுமாறு யாழில் கோரிக்கை

தேர்தல் விதிமுறைகளுக்கு அமைவாக கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் நீதியானதும், சமாதானமான முறையிலும் நடைபெற ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களுடன் நேற்று புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோதமான...

மக்களுடன் நின்று மக்களுக்காக உழைப்பவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

எமது மக்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் நோக்கிலேயே எனது அரசியல் நகர்வின் ஊடாக ஏற்படுத்தப்பட்டதுதான் சமுர்த்தி உதவித்திட்டம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். தொல்புரத்தில் சமுர்த்தி பயனாளிகளுடன் நேற்றய தினம் (22) கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் எமது...

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் கோலாகலமாக ஆரம்பமாகியது பனை அபிவிருத்திக் கண்காட்சி

வடமாகாண பனை அபிவிருத்தி வாரத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. ஒரு வாரம் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடமாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான த.குருகுலராசா நேற்று புதன்கிழமை (22.07.2015) ஆரம்பித்து வைத்துள்ளார். பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களும் பனை அபிவிருத்திச் சபையும் பதிநான்கு காட்சி அறைகளில் பனை...
Loading posts...

All posts loaded

No more posts