வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர் தெரிவு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக சிவக்கொழுந்து அகிலதாசை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நியமித்திருப்பது இயற்கைநீதிக்கு முரணான செயல் எனவும், மக்கள் வழங்கியஆணைக்கு மதிப்பளிக்காது செயற்படுவதாகவும் இதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சுட்டிக்காட்டியுள்ளார். மாகாண சபை உறுப்பினராக இருந்த அங்கஜன் இராமநாதன் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்...

நலன்புரி முகாம்களில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி கல்வி கற்கும் 1150 சிறுவர்கள்

யாழ்.மாவட்டத்தில் உள்ள நலன்புரி முகாம்களில் ஆயிரத்து 150 சிறுவர்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இன்றுவரை தமது கல்வியை தொடர்ந்து வருவதாக வலி.வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வலி.வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து 26 வருடங்களாக நலன்புரி முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதுவும் இன்றி தமிழ்க் குடும்பங்கள்...
Ad Widget

புனித பத்திரிசியார் கல்லூரியின் முத்தமிழ் விழாவும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டு நிகழ்வும்

புனித பத்திரிசியார் கல்லூரியின் தமிழ்த்தூது தனிநாயகம் தமிழ் மன்றத்தின் முத்தமிழ் விழாவும் எதிர்கட்சித் தலைவர் பாராட்டும் இன்று நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ஜெறோ செல்வநாயகத்தினால் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எட்டாவது எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கௌரவிப்பும் பாராட்டும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித்...

சிறுவர்,பெண்கள் வன்முறையை கண்டித்து யாழில் மாபெரும் பேரணி

எமது சமூகத்தில் சிறுவர் மற்றும் பெண்களின் துஸ்பிரயோகங்கள் தேவையற்றது என்ற தொனிப் பொருளில் யாழ்.மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்,தேசிய பெண்கள் சம்மேளனம்,தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்,யாழ்.கிராமிய உழைப்பாளர் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து சிறுவர்,பெண்கள் வன்முறையை கண்டித்து இன்று யாழ்.நகரில் மாபெரும் பேரணி ஒன்று இடம்பெற்றது. குறித்த பேரணி யாழ்.பேருந்து தரிப்பிடத்தில் ஆரம்பமாகி யாழ்.மாவட்ட செயலகத்தில் முடிவடைந்தது....

காங்கேசன்துறை கடற்பரப்பில் மேலும் 4 கி.மீற்றரை ஆக்கிரமித்தது கடற்படை! கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

காங்கேசன்துறை துறைமுகத்தின் பாதுகாப்புக்கு எனக் கூறி மேலும் 4 கிலோமீற்றர் நீளமான கடற்பரப்பை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் 650 இற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.வலி. வடக்குப் பிரதேசத்தில் நிலப்பரப்பை உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தின் பாதுகாப்புக்கு எனக்கூறி சுமார் ஒன்றரைக் கிலோமீற்றர் நீளமான பகுதியை ஆக்கிரமித்திருந்தனர்....

புலி படத்திற்கு சிக்கல் : புலி திரைப்படம் வெளியாகாததால் யாழில் பரபரப்பு!!!

இன்றைய தினம் நடிகர் விஜய் இன் புலி திரைப்படம் உலகெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் குறித்த திரைப்படம் ராஜா, மெஜெஸ்டிக் கொம்பிளக்ஸ் தியேட்டர்களில் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. திரைப்படத்தை பார்ப்பதற்கு அதிகாலை முதலே அதிகளவான ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு குழுமி இருந்தனர். ஆனாலும் குறித்த நேரத்துக்கு...

புதிய மாகாண சபை உறுப்பினராக அகிலதாஸ் நியமனம்

வடமாகாண சபையின் எதிர்கட்சி வரிசை வெற்றிடத்திற்கு அகிலதாஸ் சிவக்கொழுந்து தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் வடமாகாணசபை வெற்றி பெற்ற அங்கஜன் இராமநாதன் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அகிலதாஸ் சிவக்கொழுந்து நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி...

யாழில் எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு முதற்தடவையாக, வருகை தந்து முதல் நிகழ்வாக தந்தை செல்வா சதுக்கத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார். இன்று காலை 8.30 மணியளவில் துரையப்பா மைதானத்திற்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் யாழ்-கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம்,வடமாகாண சபை...

ஓர் ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவர முடியவில்லை: முதலமைச்சர் சி.வி ஆதங்கம்

அரசியல் கைதிகளின் வழக்குகளை நடத்துவதற்கு தேவையான நிதி சேகரிப்பதற்காக ஓர் அமைப்பை உருவாக்கி அதன்மூலம் நிதியை திரட்டி வழக்கை நடத்துவோம் என எண்ணியிருந்தோம். எனினும், அந்த அமைப்பை ஓர் ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவர முடியாமல் போய்விட்டது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 'சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், அரசியலாக்கப்பட்டமையால் அவர்களுக்கு விடுதலை...

பாலியல் துன்புறுத்தல் : அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான பாடசாலை அதிபரை தொடர்ந்தும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரம், புதன்கிழமை (30) உத்தரவிட்டார். பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அதிலிருந்து தப்புவது தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்வொன்றை, தென்மராட்சி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்புப் பிரிவினர் அண்மையில் இந்தப்...

அப்பாவை விடுதலை செய்யுங்கள்:ஜனாதிபதியிடம் கோரிக்கை

'எங்கள் அப்பாவை கட்டியணைக்க ஆசையாகவுள்ளது, ஜனாதிபதி மாமா, எங்கள் அப்பாவை விடுதலை செய்யுங்கள்' என்ற கோஷத்துடன், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பிள்ளைகள், யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (30) பேரணியொன்றை நடத்தினர். யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பமாகிய இந்தப் பேரணி, முதலமைச்சர் அலுவலகம் வரைச் சென்றது. அதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு கோரி...

மரண பயம் வந்துவிட்டது – மஹிந்த

எமது நாட்டில் வாழ்கின்ற பிள்ளைகளின் இதயத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட மரண பயம், அவர்களின் இதயங்களில் மீண்டும் சூழ்கொண்டுள்ளது. இது தனக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சேயா சந்தவமி கொலை மற்றும் சிவலோகநாதன் வித்யா என்ற...

மல்லாவியில் விபத்து: 40 பேர் காயம்

மல்லாவி, ஒட்டறுத்தக்குளம் சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸும் வவுனியாவிலிருந்து பனங்காமம் நோக்கிச்சென்ற பஸ்ஸும் மல்லாவி ஒட்டறுத்தகுளம் சந்திக்கு அருகில் வைத்து நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. காயமடைந்தவர்கள் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி...

சுன்னாகத்தில் தொடர்கிறது இளைஞர் கும்பலின் அட்டகாசம்!

சுன்னாகம் கந்தரோடை மடம் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிள்களில் வாள்கள், பொல்லுகள், தடிகள் சகிதம் வந்த இளைஞர் கும்பல் ஒன்று அந்தப் பகுதியில் உள்ள பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டின் வேலிகளை வெட்டி வீழ்த்தியதுடன் அந்த வீட்டில் இருந்த கல்வி கற்கும் மாணவனையும் தாக்கி அட்டகாசம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்....

உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டுவோம்! ஐ.நா. பொதுச் சபை மாநாட்டில் ஜனாதிபதி

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல் ஆகியன மூலமாக கடந்த கால பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70ஆவது மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நிலையான அபிவிருத்தி மற்றும்...

உதயனுக்கு எஸ்மண்ட் விக்கிரமசிங்க விருது

ஊடக சுதந்திரத்துக்கான எஸ்மண்ட் விக்கிரமசிங்க விருது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக்கு வழங்கப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து அதன் நிறுவுனர் பி. சரவணபவன் உதயன் பத்திரிகைக்கான விருதைப் பெற்றுக்கொண்டார். யுத்த காலத்தில் பலத்த சவால்களுக்கு மத்தியில் செயற்பட்ட உதயன் நிறுவனம் தமிழ் மக்களின் குரலை ஏனைய...

கடற்படையினரினால் வடக்கு கடற்பரப்பில் அளவைக்குறிகள் நிர்மாணிப்பு

கடற்படையின் நீரியல் அளவைப் பிரிவினரினால் வடக்கு கடற்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட அளவைக்குறிகளின் தொடர்களை இலங்கை கடற்படையின் பிரதம நீரியல் அளவையியலார் ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி மற்றும் இலங்கை அளவையியல் திணைக்களத்தின் சிரேஷ்ட உயரதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும், தேசிய அளவைக்குறிகளுடன் இணைக்கப்படும் நோக்கில் காங்கேசன்துறை மற்றும் நெடுந்தீவுப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அளவைக்குறிகளானது, 86 வருடங்களின் பின் சராசரி...

18 திரைப்படங்களில் ஒரு திரைப்படம் சிகரெட் மதுபானம் போன்றவற்றுக்கு விளம்பர தூது

அண்மைக்காலமாக வௌியாகி வரும் தமிழ் திரைப்படங்கள் சிறுவர்களை இலக்கு வைக்கும் விதம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையொன்றும், 'நிதர்சனம்' பத்திரிகை வௌியீடும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் (ADIC) நேற்று (30) வௌியிடப்பட்டது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ் இரண்டு வௌியீடுகளும் நடைபெற்றன. இன்று (01) இடம்பெறவுள்ள...

புதிய அரசு அமைந்த பின் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது!

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்த விவாதம் நேற்றய தினம் ஜெனிவா அமர்வில் இடம்பெற்று வருகின்றது. இதன்போது மனித உரிமைகள் ஆணையாளர் சைட் ராத் அல் ஹூசைன் அறிக்கை தொடர்பில் உரையாற்றிய காணொளி ஔிபரப்பட்டது. இலங்கையில் 2015ம் ஆண்டுக்குப் பின் கருத்துச் சுதந்திரத்திற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் வடக்கு...

உலக சிறுவர் தினம் இன்று

உலக சிறுவர் தினமாகும் இன்றாகும். உலக நாடுகளில் வாழ்கின்ற சிறுவர்களிடையே புரிந்துணர்வையும், தூரநோக்கான பொது நல திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக 1954 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இவ்வாண்டு சிறுவர் தினத்தின் தொனிப்பொருளானது ´சிறுவருக்கு நட்புறவான சூழல்- உலகை மிளிரச் செய்யும் அழகிய தேசம்´...
Loading posts...

All posts loaded

No more posts