Ad Widget

மல்லாவியில் விபத்து: 40 பேர் காயம்

மல்லாவி, ஒட்டறுத்தக்குளம் சந்திக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸும் வவுனியாவிலிருந்து பனங்காமம் நோக்கிச்சென்ற பஸ்ஸும் மல்லாவி ஒட்டறுத்தகுளம் சந்திக்கு அருகில் வைத்து நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

காயமடைந்தவர்கள் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சிறிய காயங்களுக்குள்ளான ஐந்து பேர், மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts