Ad Widget

கடற்படையினரினால் வடக்கு கடற்பரப்பில் அளவைக்குறிகள் நிர்மாணிப்பு

கடற்படையின் நீரியல் அளவைப் பிரிவினரினால் வடக்கு கடற்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட அளவைக்குறிகளின் தொடர்களை இலங்கை கடற்படையின் பிரதம நீரியல் அளவையியலார் ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி மற்றும் இலங்கை அளவையியல் திணைக்களத்தின் சிரேஷ்ட உயரதிகாரிகள் பார்வையிட்டனர்.

மேலும், தேசிய அளவைக்குறிகளுடன் இணைக்கப்படும் நோக்கில் காங்கேசன்துறை மற்றும் நெடுந்தீவுப் பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அளவைக்குறிகளானது, 86 வருடங்களின் பின் சராசரி கடல் மட்ட அளவைக் குறிகளை புணர்நிர்மாணிப்பதற்குரிய முதல் படியாகும்.

2014ஆம் ஆண்டில் ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி அவர்களின் வழி காட்டலின் கீழ் இலங்கை கடற்படையின் நீரியல் அளவைப் பிரிவின் தலைவர் லெப்டின்னட் கொமாண்டர் பண்டார அவர்களால் இச்செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன், இப்பிரிவானது தனது வலையமைப்பினை விஸ்தரிக்கவும் திட்டமிட்டுள்ளது. கடற்படையினரின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செயற்றிட்டத்தினை பாராட்டிய அளவையியல் அதிகாரிகள் எதிர்காலத்தில் கடற்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவும் முன்வந்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் நீரியல் அளவைப் பிரிவின் திறன்கள் விரிவுபடுத்துவதற்குறிய தேவையை இனங்கண்டு இதர நிறுவனங்களுடன் இணைந்து நீரியல் அளவை சாரந்த செயற்பாடுகளை திறன்பட மேற்கொள்வதற்காக இலங்கை கடற்படை வரலாற்றில் முதற்தடைவையாக நீரியல் அளவைப் பிரிவின் பிரதான நீரியல் அளவையாளராக ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி அவர்கள் இலங்கை கடற்படை கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்தீர விஜேகுணரத்ன அவர்களினால் நியமிக்கப்பட்டார்.

Related Posts