கொத்து ரொட்டிக்குள் ரோமம், தீக்குச்சி!- யாழ் உணவகமொன்றிற்கு எதிராக வழக்கு

யாழ்.நகரில் உள்ள உணவகம் ஒன்றின் மீது வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த உணவகத்தின் மீது பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், வழக்கும் பதிவு செய்யப்படவுள்ளது. குறித்த உணவகத்தில் கொத்து ரொட்டி பாசல் ஒன்றை வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர், அதனுள் தீக்குச்சி மற்றும் இறைச்சியில் அகற்றப்படாத ரோமம் ஆகியன உள்ளமை கண்டு குறித்த உணவகத்திற்குச்...

தாழமுக்க வலயமானது வலுவடைந்து சூறாவளியாக மாற்றம்!

கடந்த சில தினங்களாக அராபியக்கடல் பகுதியில் தோன்றியிருந்த தாழமுக்க வலயமானது படிப்படியாக வலுவடைந்து, தற்போது அயனமண்டல (Tropical Storm) சூறாவளியாக உருவெடுத்துள்ளது. இதற்கு சபாலா (Chapala) என பெயரிடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை (2015.10.30) செய்யப்பட்ட அவதானிப்பின் போது, இந்த சபாலா சூறாவளியானது மணித்தியாலத்திற்கு 07 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது தற்போது...
Ad Widget

யாழ்.போதனா வைத்தியசாலை ‘பாஸ்’ நடைமுறை நீக்கம், பார்வையிடும் நேரங்களிலும் மாற்றம்!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் நாளை மறுதினம் தொடக்கம் நோயாளரைப் பார்வையிட வருவோர் மற்றும் சிகிச்சை பெறவருவோர் விடயத்தில் புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இந்த நடைமுறைகளுக்கு பொதுமக்கள் அனைவரையும் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிடுபவர்களுக்கான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக காலை 6மணிமுதல் காலை...

பொலிஸாருக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்

பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், பொலிஸாருக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாடுகள் நூற்றுக்கணக்கில் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு கொழும்பை மையமாகக் கொண்டு செயற்படுகின்ற போதிலும், இலங்கையின் பல்வேறு பாகங்களில் ஒன்பது கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆணைக்குழுவின்...

தமிழரின் உரிமைகளை சிங்களவர் அன்பளிப்பாகத் தரமாட்டார்கள் போராடியே பெறவேண்டும் – சொல்ஹெய்ம்

இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகளை பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற புத்தக வெளியிட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழர்கள் தமது உரிமைகளைப் போராடியே பெறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கும்...

மஹிந்தவின் மேலும் ஒரு நிலக்கீழ் மாளிகை கண்டுபிடிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஜனாதிபதி மாளிகையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்த நிலக்கீழ் மாளிகை தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அமைக்கப்பட்ட பதுங்கு குழி என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான நிலக்கீழ் மாளிகை ஒன்று அலரி மாளிகையினுள் உள்ளதாக அபயராமையில் வைத்து அவர் குறிப்பிட்டிருந்தார். மஹிந்த ராஜபக்ச கூறும் வகையில் மேலும் ஒரு நிலக்கீழ் பதுங்கு குழி...

யாழில் பணத்துக்காக குழந்தையின் தந்தையை மாற்றிய பெண்!!

பணத்துக்காக குழந்தையின் தந்தையை மாற்றிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. தாபரிப்பு பணத்தினை பெற்றுக் கொள்வதற்காக தனக்கு பிறந்த குழந்தைக்கு வேறொரு இளைஞன் ஒருவனை தந்தையாக்க பெண்ணொருவர் முயன்றுள்ளார். ஆனால் அக்குழந்தை அவ்விளைஞனுக்கு பிறந்தது அல்ல என்று மரபணு பரிசோதனையின் ஊடாக அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், தாபரிப்பு கேட்டு வழக்குத்தாக்கல் செய்த பெண், குறித்த இளைஞனுக்கு நட்டஈடு...

உயிருடன் கரையொதுங்கிய திமிங்கலம் பெரும் போராட்டத்தின் பின்னர் கடலுக்குள் விடப்பட்டது

முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கி உயிருடன் கரையொதுங்கிய 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று 8 மணிநேர போராட்டத்தின் பின்னர், கடலுக்குள் விடப்பட்டது. ஆழ்கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய 70 அடி நீள திமிங்கலம், கடுமையான அலைகளால் கரைக்கு இழுத்து வரப்பட்டது. இந்த தகவலை அறிந்த முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், முல்லைத்தீவு...

ஜனாதிபதி மாளிகையிலுள்ள பங்கர் பற்றிய செய்திகளால் அச்சுறுத்தல் இல்லை

ஜனாதிபதி மாளிகையில் நிலத்தின் கீழ் பதுங்குக் குழி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வௌியாகியுள்ள கதைகளால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என, இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர குறிப்பிட்டுள்ளார். இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்கான குறித்த பதுங்குக் குழி...

யாழில் இரவோடு இரவாக மறைந்த வள்ளுவர் சிலை : மாநகர சபை ஆணையாளருக்கு தெரியாதாம் !!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்.நகரின் சத்திரச்சந்தியில் இருந்து அகற்றப்பட்ட புராதன வள்ளுவர் சிலைக்கு என்ன நடந்தது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி இரவு 8மணியளவில் வீதி அகலிப்பு மற்றும் வீதி சமிக்ஞை விளக்குகள் அமைப்பதற்காகவும் குறித்த வள்ளுவர் சிலை மக்களின் கண்ணுக்குப் படாமல் இரவோடு இராவாக...

மோட்டார் வாகன லீசிங் வசதி, 90 வீதம் வரை அதிகரிப்பு

மோட்டார் வாகன லீசிங் சம்பந்தமாக நிதி நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டிய புதிய முறைமைக்கமைய, வாகனங்களுக்கு வழங்க வேண்டிய லீசிங் வசதி, 90 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு கூறியுள்ளது.

தீபாவளி கொண்டாட்டத்தை இந்துக்கள் புறக்கணிப்பர்! – இந்து மாமன்றம் எச்சரிக்கை!!

தமிழ் அரசியல் கைதிகளை தீபாவளிக்கு முன்னர் விடுவிக்க வேண்டும். இல்லையேல் அரசாங்கத்தின் தீபாவளி தொடர்பான நிகழ்வுகளில் சுயகௌரவமுடைய எந்தவொரு இந்து மகனும் கலந்து கொள்ளமாட்டான் என்று அகில இலங்கை இந்து மாமன்றம் எச்சரித்துள்ளது. இது குறித்து இந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன், பொதுச் செ லாளர் பொ.கதிர்காமநாதன் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த...

இராணுவத்தினரையும் பிடித்து அடையுங்கள் – வடமாகாண முதலமைச்சர் சி.வி

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றால் போர்க் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரையும் விடுவிக்க வேண்டும் எனக் கேட்கின்றனர். குற்றம் செய்த இராணுவத்தினர், எங்கே சிறையில் இருக்கின்றனர்? முதலில் அவர்களைப் பிடித்து சிறையில் அடையுங்கள்.5 அல்லது 6 வருடங்கள் கழித்து அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கலாம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். இலங்கைக்கான அமெரிக்க...

புலிகளை வால் பிடித்திருந்தால் கூட்டமைப்புக்கு நானே தலைவன் – வீ.ஆனந்தசங்கரி

'தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்காமையால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நான் துரோகியாக்கப்பட்டேன். விடுதலைப் புலிகள்தான் ஏகபிரதிநிதிகள் என்று சொல்லி இருந்தால், நான்தான் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்.இரா.சம்பந்தன் உட்கார்ந்து இருக்கும் கதிரை என்னுடையது. அதனை குறுக்கு வழியில் பறித்து அவர் இன்று இருக்கின்றார்' என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்....

இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க உதவும்! யாழ். ஆயரிடம் அமெரிக்கக் குழு

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது. ஆனால் அந்த உதவிகளை இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே செய்ய முடியும். வடக்கு மாகாண சபை ஊடாக செய்ய முடியாது என யாழ். வந்த அமெரிக்கக் குழுவினர் தன்னிடம் தெரிவித்தனர் என யாழ். ஆயர் வண. ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார். மூன்றுநாள் பயணமாக இலங்கை வந்துள்ள...

இரகசிய முகாம்களில் உள்ள எமது உறவுகளை உடன் விடுவியுங்கள்! காணாமல்போக செய்யப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர்மல்கக் கோரிக்கை!!

காணாமல்போக செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் 25ஆவது வருட நிறைவு தின நிகழ்வு செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. காணாமல்போக செய்யப்பட்டவர்களின் குடும்ப ஒன்றியம் ஏற்பாடு செய்த நிகழ்வில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இருந்து காணாமல்போக செய்யப்பட்டோரின் உறவினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். அவர்கள், நாட்டில் இரகசிய முகாம்கள் உள்ளன என திடமாகத் தெரிவித்ததுடன்,...

யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு அதிகார சபையின் நடமாடும் சேவை!

புனர்வாழ்வு அதிகார சபையினரின் ஏற்பாட்டில் இம்மாதம் 29, 30 ஆந் திகதிகளில் உடுவில் மற்றும் கரவெட்டி பிரதேச செயலங்களில் நடமாடும் சேவைகள் இடம்பெறவுள்ளன. கோப்பாய், தெல்லிப்பளை, உடுவில் ஆகிய பிரதேச செயலக பிரிவினைச் சேர்ந்த பயனாளிகளுக்கு உடுவில் பிரதேச செயலகத்தில் இம்மாதம் 29 ஆந்ததிகதி மு.ப 8.00 மணிமுதல் பி.ப. 4.00 மணிவரையும் பருத்தித்துறை, மருதங்கேணி,...

யாழில் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஐயசேகர

விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஐயசேகர நேற்று யாழிற்கு விஐயம் ஒன்றை மேற்கொண்டார். அமைச்சர் இதன்போது யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றிருந்தார். நவீன மயமாக்கப்பட்டு வரும் யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கினை அமைச்சர் பார்வையூற்றார். இதில் இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட், மற்றும் விளையாட்டுத்துறை செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன்...

வடக்கில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான விதவைகள் :அமெரிக்க குழுவிடம் முதலமைச்சர் தெரிவிப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள, உலக நாடுகளின் பெண்கள் விடயம் குறித்து ஆராயும் அமெரிக்க அதிகாரியான கேத்தரின் ரஸ்ஸல் மற்றும் அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் குழுவினர் யாழிற்கு நேற்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்கள். சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில்...

புலமைப் பரிசில் மாணவர்கள் பாதிப்பு – கல்வி அமைச்சுக்கு எதிராக முறைப்பாடு

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் அநியாயம் இழைக்கப்பட்ட சிறுவர்களுக்காக, கல்வி அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் தொகையை குறைத்தமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அந்த சட்ட நடவடிக்கைக்கும் மேலாக போராட்டத்தினை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக, குறித்த சங்கத்தின்...
Loading posts...

All posts loaded

No more posts