- Friday
- November 21st, 2025
சமூக வலைத்தளங்களில் தனி நபரை இழிவுபடுத்தும் வகையிலான பதிவேற்றங்களுக்கு எதிராக புதிய சட்டமொன்றை அரசாங்கம் கொண்டுவரவுள்ளதாக நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் வழக்குகளின் காலதாமதத்தை குறைப்பதற்கு விசேட நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். நீதி அமைச்சில் நேற்று (19) இடம்பெற்ற சட்டம் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுக்க ளின் பிரதிநிதிகளுடனான...
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வெளிநாடுகளில் தூதுவர்களாகப் பணியாற்றிய படைத் தளபதிகள் அண்மையில் பாரிய, மோசடிகள் குறித்த விசாரிக்கப்பட்டது குறித்து, மைத்திரிபால சிறிசேன அதிருப்தி தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், வெளிநாடுகளில் தூதுவர்களாகப் பணியாற்றிய, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கொட்டேகொட, முன்னாள் கடற்படைத் தளபதிகள் அட்மிரல் திசார சமரசிங்க, அட்மிரல் வசந்த கரன்னகொட, முன்னாள்...
தமிழ் மக்களின் விடிவுக்காக சுமார் இரண்டு தசாப்தங்களாக போராடி இன்று மீளாத்துயிலில் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளீர் அரசியல் துறையின் முன்னாள் பொறுப்பாளராகவிருந்த தமிழினி அவர்களது புகழுடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் அஞ்சலி செலுத்தினர். பரந்தன் சிவபுரத்தில் உள்ள தமிழினி அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது புகழுடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...
வடக்கு மாகாண பொதுசேவையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டி பரீட்சை விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படும் இறுதி திகதி 16/11/2015 இது தொடர்பிலான அறிவித்தலை முழுமையாக பார்வையிடுவதற்கு
யாழ். மாவட்டத்தில் 7 பிரதேச செயலகங்களில் 1318 குடும்பங்களைச் சேர்ந்த 4,737 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள் பல வருடங்களாக தங்களது சொந்த இடங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்த நிலையில் வாழ்ந்து வருவதால் இவர்களுக்கான உலருணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீள் குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், என். ரவிராஜ், ரி.மகேஸ்வரன், ரி.எம்.தசநாயக்கா ஆகியோரின் படுகொலைகள் சம்பந்தமான விபரங்களை தந்து உதவுமாறு சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் தங்களை வேண்டியுள்ளதாக அறிகின்றேன். இதே காலத்தில்தான் தங்கத்துரை, கிங்ஸ்லி ராஜநாயகம், லக்ஸ்மன் கதிர்காமர் மற்றும் ஆகியோரின் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. தயவு செய்து இவர்களின் விபரங்களையும் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றிய செயலாளர் நாயகத்துக்கு...
பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவால், தமிழக பல்கலைக்கழகத்தில் தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு ஆசிரியர்களாக வேலை பார்க்கும் 5 ஆயிரம் தமிழர்களுக்கு வேலை பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) உத்தரவின்படி, தபால் மூலம் பட்டப்படிப்பு படிக்கும் வழிமுறை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்தது....
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் படுகொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளையானின் உதவியை நாடியதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம்...
விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழினியின் பூதவுடலுக்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அஞ்சலி செலுத்தியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த தமிழினியின் பூதவுடல் கிளிநொச்சி பரந்தனிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டுச் செல்லபட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவை...
போரின் இறுதி மாதத்தில் 40ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் இடம்பெற்றிருக்கலாம் என சில மதிப்பீடுகள் வெளியிடப்பட்டிருக்கின்ற போதிலும் இறந்தவர்கள் தொடர்பான உறுதியான கணிப்பீடுகள் கிடைத்திருக்கவில்லை எனவும் நினைத்ததிலும் பார்க்க குறைவான மரணங்களே இடம்பெற்றிருக்கக்கூடுமெனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ' ஸ்ரெய்ட்ஸ் ரைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போதே...
யாழ்.மாவட்டத்தில் உயர் கல்வியை வழங்கும் நிறுவனங்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு 7 வகையான அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்மொழிந்து அந்தச் செயற்றிட்டங்களை மேற்கொள்ள 2,375 மில்லியன் ரூபாய் நிதி தேவையென, யாழ்.மாவட்டச் செயலகத்தால் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்திடம் கோரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் உயர் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியன யாழ்ப்பாணத்தில் உயர்கல்வியை வழங்கும் நிறுவனங்களாக இருக்கின்றன. இவை...
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1991ம் ஆண்டு முதல் தன்னை இணைதுக் கொண்ட்வர் சிவகாமி. அனைவராலும் தமிழினி என்று அறியப்பட்டவர். புலிகளின் அரசியல் துறை , மற்றும் மகளீர் அணிப் பொறுப்பாளராகவும் அவர் கடமையாற்றி இருந்தார். 2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் யுத்தத்தி தோல்வியைத தழுவிய சமயத்தில் , மக்களோடு மக்களாக அவர் சென்று...
மறநை்த முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி அவர்களது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை தமிழ் மக்களது அரசியல் விடுதலைக்கான பயணத்தில் தனது 19வது வயதில் தன்னை இணைத்துக் கொண்ட சிவகாமி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட தமிழினி அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் இறுதிக்கணம் வரை மக்களின்அரசியல்...
இலங்கைக்கு புதிய ரக போர் விமானங்களை வழங்க இந்தியாவும் முன்வந்துள்ளது. இலங்கை விமானப்படைத் தளபதி பாகிஸ்தான் செல்லவுள்ளார் என்றும் அவர் பாகிஸ்தானின் ஜேஎப்-17 சுப்பர்சொனிக் விமான கொள்வனவு தொடர்பில் பேச்சு நடத்துவார் என்றும் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து இந்தியா, தமது விமானங்களை கொள்வனவு செய்யுமாறு இலங்கையிடம் கேட்டுள்ளதாக விமானப்படை தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் இலங்கை விமானப்படை...
வடமாகாண சபை மூலம், மக்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது, அபிவிருத்தி நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது, மற்றும் வடமாகாண சபையின் சமூகமான செயற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள், வடமாகாண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விரைவில் பேச்சு நடத்தப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப்...
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பினால் இன்று திங்கட்கிழமை விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'வடக்கு மாகாணத்திலிருந்து 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இரண்டரை மணித்தியால காலக்கெடுவுக்குள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவமானது அம்மக்களை தொடர்ச்சியாக 25 வருடங்கள் மிகுந்த...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் இறுதிக் கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளன. அவரது உடலத்தைக் உறவினர்களிடம் கையளிப்பதில் சிக்கல்கள் எழலாம் என சிக்கல்கள் எழுந்திருந்தன. எனினும் நேற்றைய தினமே தமிழினியின் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு அவரது சொந்த இடமான கிளிநொச்சி - பரந்தனுக்குக் கொண்டுவரப்பட்டது. அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது...
கடந்த 2009 ற்கு முன்னரான காலத்தில் ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தின்போது காயமடைந்து முள்ளந்தண்டு பாதிப்பிற்கு உள்ளாகி இடுப்புக்கு கீழ் உணர்வு இழந்த நிலையில் வாழும் இளைஞர் ஒருவருக்கு மூன்று லட்சம் ரூபா நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் உள்ள தமிழ்ச்சோலைப் பள்ளி நிர்வாகத்தினால் அனுப்பப்பட்ட நிதி தமிழ்த்...
இந்திய வீடமைப்பு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்திய தூதரகமும், செஞ்சிலுவை சங்கமும் இணைந்து முன்னெடுத்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நாளை உயர்மட்ட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தகவல் தொடர்பாடல் மற்றும் மனிதவள இராஜதந்திர...
கைதடி மற்றும் நாவற்குழி பகுதியில் ஏ 9 நெடுஞ்சாலையின் பெரிய அளவிலான வீதி விளம்பரப் பலகைகளின் இரும்புக் குழாய்களையும், இரும்புச் சட்டங்களையும் நள்ளிரவு நேரத்தில் களவாட முற்பட்ட 8 இராணுவத்தினரையும் சாவகச்சேரி நீதவான் தலா 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். எதிர்வரும் 29 ஆம் திகதி இவர்கள் சாவகச்சேரி நீதிமன்றத்த்pல் ஆஜராக...
Loading posts...
All posts loaded
No more posts
