- Friday
- November 21st, 2025
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழியை அவர் மீறினால் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி எனப்படும் சுப்ரமணியம் சிவகாமி காலமானார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமான சூழலை எட்டியுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கைதிகளின் நிலைமை தொடர்பிலும் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறும் கோரி அவசர கடிதமொன்றை அனுப்பியிருந்தார். சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் ஜனாதிபதியின் உத்தரவாதம் கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிடமாட்டோம்...
எமது சமூகம் மனித விழுமியங்களை இழந்து எப்படியும் வாழலாம் என்ற துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மாவட்ட ரீதியிலான முதியோர் நலன்பேணும் அமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த புதன்கிழமை யாழ்.சென் ஜோன்ஸ் அன்புலன்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்...
நெல்லியடி கப்பூது பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (16) மதியம் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததில் குறித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞன், இன்று சனிக்கிழமை (17) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் கரவெட்டி பகுதியை சேர்ந்த குமாரசாமி நிரோஜன் (வயது 25) என்ற இளைஞனே தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். கரவெட்டியில்...
தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (17) சென்று கைதிகளுடன் உரையாடினார். அதன் பின்னரே தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு...
மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சோனப்பு கப்பூது வீதியில் நேற்று காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் கரவெட்டி மத்தொனியைச் சேர்ந்த குமாரசாமி –நிரோஜன் (வயது 25) என்பவரே தீக்காயத்துக்குள்ளாகியுள்ளார். மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்ததுடன் தலைக்கவசமமும் எரிந்த நிலையில் சம்பவ இடத்தில் காணப்படுகின்றது. படுகாயமடைந்த நபர் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக...
மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பயிலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன், விபத்தொன்றில் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பயலும் மாணவர்கள் இருவர் பயணம் செத்த மோட்டார் சைக்கிள், ஜீப் வண்டியுடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஒருவர் மரணமடைந்துவிட்டதாகவும் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்...
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் கடந்த ஆறு வருடங்களாக காணாமல் போனார்கள் என்று அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் தளபதிகளில் ஒருவரான விநாயகம் என்பவரின் மனைவி மற்றும் பிள்ளைகளை இனந்தெரியாத நபர்கள் யாழ்ப்பாணம் வரணியில் வைத்து இறக்கி விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த...
யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் ஊடக நிறுவனமொன்றின் விளம்பர பதாகையை விளம்பர நிறுவனமொன்று நாவற்குழிப் பிரதேசத்தில் அமைத்து இருந்தது. விளம்பர பதாகைகளை அமைக்கும் போது அவை காற்றால் விழாமல் இருக்க பாரிய இரும்பு கேடர்கள் கொண்டே அமைக்கப்பட்டு வருகின்றன. குறித்த விளம்பர நிறுவனம் அமைத்திருந்த ஏனைய நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்துள்ளன. அந்த இரும்புகளை...
அரச மொழிகள் திணைக்களத்தில் மொழிப்பெயர்ப்பு அதிகாரிகள் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (சிங்களம்/ ஆங்கிலம்- தமிழ்/ ஆங்கிலம்- சிங்களம்/ தமிழ்) ஆகிய மூன்று பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. குறித்த வெற்றிடங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (16.10.2015) வௌியான வர்த்தமானில் வௌியிடப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். குடாநாட்டில் உள்ள ஆலயங்கள் தோறும் விசேட வழிபாடுகளில் ஈடுபமாறு அகில இலங்கை சைவ மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இன, மத வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் இணைந்து அரசியல் கைதிகளின் விடுதலைக்கு குரல்கொடுக்குமாறும் சைவ மகா சபை கோரியுள்ளது. இது தொடர்பாக சைவ மகா சபை...
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக அடுத்த மாதம் 7ஆம் திகதிக்கு முன்னதாக தீர்வு முன்வைக்கப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியை கைதிகள் நிராகரித்துள்ளனர். இந்த உறுதிமொழியை ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமெனவும், அதுவரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக எதிர்வரும்...
தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதமிருக்கும் கைதிகளில் மேலும் 12பேரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிகக்ப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த ஐந்து தினங்களில் உடல் நிலை மோசமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் எண்ணிக்கை 33ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றுக் காலையிலும் அனைத்து சிறைச்சாலைகளிலும் மருத்துவ அதிகாரிகளால் உண்ணாவிரதமிருக்கும்...
அரியாலை முள்ளியில் மனித மண்டையோடு, எலும்புகள் மற்றும் 2 பெண்களின் ஆடைகள், அவர்களது பொருள்கள் என்பன இருந்தமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள சூழமைவுகளைப் பார்க்கும் போது அவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னர் அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. மண்ணில் புதைக்கப்பட்டிருந்த மண்டை ஓடு உள்ளிட்ட அந்தப் பொருள்கள் மணல் அகழும்போதே வெளிப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியாலைக்கும் செம்மணிக்கும்...
நயினாதீவு, விநாயகர் வீதியின் புனரமைக்காக வைக்கப்பட்டிருந்த கற்களை, அந்த வீதியை புனரமைப்பதற்காக ஒப்பந்த செய்திருந்த நபர், வீடு கட்டும் ஒருவருக்கு, விற்பனை செய்துள்ள விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பொதுமக்களால் பிடிக்கப்பட்ட குறித்த ஒப்பந்தகார், கிராமஅலுவலர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்ட கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர் மொஹமட் சித்தீக், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நிதியுதவி செய்திருப்பதாக குற்றப்புலனாய் பிரிவினர் (சி.ஐ.டி) கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். சித்தீக்கின் மனைவினுடைய வங்கிக் கணக்கில் பலர், வைப்புக்களை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே இது தொடர்பில் இன்டர்போலின் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக இந்த வங்கிக்...
வடமாகாணத்தில் பாற்பசு, ஆடு, கோழி ஆகிய கால்நடைகளை வளர்க்கும் பண்ணையாளர்களில் மாவட்ட ரீதியாக சிறந்த பண்ணையாளர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டிகள் இடம்பெற்று அவர்கள் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர். இதற்கான நிகழ்வை வடமாகாண விவசாய கமநல சேவைகள் கால்நடை அபிவிருத்தி கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கல் நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. இப்போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும்...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தரத் தீர்வு பெற்றுத் தரப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் நேற்று(16.10.2015) உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி தலைமையிலான நல்லாட்சி அரசு பொதுமன்னிப்பில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று...
எங்களின் பிள்ளைகளுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும். விடிவு கிடைக்காவிடின் கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது போல எங்களின் கண்ணீர் இலங்கையை எரிக்கும் என்று இன்று யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலடியில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயார் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள்...
Loading posts...
All posts loaded
No more posts
