Ad Widget

2017ல் அனைத்து அரச நிறுவனங்களிலும் இலவச wifi

2016ஆம் ஆண்டில் அரச நிறுவனங்களில் இலவச wifi வலயங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம், 2016ஆம் ஆண்டில் 3500 அரச நிறுவனங்களில் இலவச wifi வலயங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் இலவச wifi வலயங்களை ஸ்தாபிப்பதே தமது எதிர்பார்ப்பு என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலகக் கட்டடங்களில் இந்த இலவச wifi வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் ஊடாக, அரச நிறுவனங்களில் தமக்கான சேவையை பெற்றுக் கொள்ள செல்லும் ஒருவர் அங்கு தனது கையடக்கத் தொலைபேசி அல்லது மடிக்கணனி ஆகியவற்றின் ஊடாக இலவச இணையத்தள வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் 173 நிலையங்களில் இதுவரை இலவச wifi வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts