Ad Widget

வேமாக பரவி வரும் வயிற்றோட்டம்: மக்களை அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வயிற்றோட்டத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக நோய் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநோய் தொற்றுக்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாப்பதற்காக சுட்டாறிய நீரை பருகுமாறு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமாரன் பொதுமக்களிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கிருமி தொற்றினாலும், சுகாதாரமற்ற உணவு பழக்கவழக்கங்களினாலும் வயிற்றோட்டம் ஏற்படுவதாகவும், மக்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநோய் தாக்கத்திற்குள்ளாகி இதுவரை ஜனவரி மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரை 3 ஆயிரத்து 629 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் நந்தகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts