Ad Widget

இலங்கையில் இணைய பாவனை சுதந்திரம் முன்னேற்றம்! – சர்வதேச அமைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் இலங்கையில் இணையத்தள பாவனை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் ப்ரீடம் ஹவுஸ் எனும் அமைப்பு சர்வதேச ரீதியான இணையத்தள பாவனை சுதந்திரம் பற்றி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

கடந்த வருடத்தை விட இந்த ஆண்டில் இலங்கையர்களுக்கு இணையத்தள பாவனை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்கு எடுத்துக்காட்டாக கடந்த ஆட்சியில் தடை செய்யப்பட்டிருந்த தமிழ்நெட் உள்ளிட்ட இணைய செய்தித்தளங்கள் மீதான தடைநீக்கத்தை ப்ரீடம் ஹவுஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் முன்னைய அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் தற்போது இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல், மனித உரிமை மீறல்கள், அச்சுறுத்தல் மற்றும் வன்முறை செயற்பாடுகள் குறைந்துள்ளதாகவும் குறித்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Posts