- Friday
- November 21st, 2025
Yarl IT Hub அமைப்பால் கடந்த வெள்ளிக்கிழமை (16), சனிக்கிழமைகளில் (17) இடம்பெற்ற Yarl Geek Challenge இன் நான்காம் பருவகாலத்தின் வெற்றியாளராக வவுனியா மத்திய மகா வித்தியாலயத்தின் அணி ஒன்று தெரிவானது. வெற்றி பெற்ற வவுனியா மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் Arduino வன்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதவொன்றில் கையால் தட்டும் கோலத்தின் மூலம்...
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் ஐரோப்பிய பயணத்திற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான காரணம் என்ன என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்று வெள்ளிக்கிழமை காலையில் காத்தான்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டடிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில், வீட்டில் வைத்து ஆசிரியரான தமிழ்நாட்டு மனோகரன் எனப்படும் கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மனைவி தயாளினி ஆகியோர் ஒரே நேரத்தில் சுட்டுக்...
வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு தேர்தல்களின் போது வாக்களிக்க வசதியேற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் சபாநாயகரிடம் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 22 பாரளுமன்ற உறுப்பினர்கள் குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
காதல் தோல்வியால் மனமுடைந்த கடற்படை சிப்பாய் ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பசற பகுதியைச் சேர்ந்த எஸ்.பி ஏ ல்கமல் ஜெயதிலக (வயது 21) என்ற கடற்படை சிப்பாயே உயிரிழந்துள்ளார். குறித்த கடற்படை சிப்பாய் அல்லைப்பிட்டி கஞ்சதேவ கடற்படை முகாமில் கடமையாற்றிக் கொண்டிருந்தபோது தனது ரி 56...
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக யாழ். மாவட்டத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடும் அனைத்துத் தனியார் வாகனங்களும் யாழ்.மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் யாழ்.மாவட்ட உளசமூக அதிகாரி பூ.கெளதமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் சில பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்ற துஷ்பிரயோகங்களை முற்றாகத்...
வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை (23) கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்த முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதேவேளை, கிண்ணியா, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் கல்முனை உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட ங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது...
காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணிப்புரியும் கடற்படை சிப்பாய் ஒருவர் ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவி ஒருவருக்கு தனது மர்ம பிரதேசத்தை காட்டியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த கடற்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் 33 வயதான இந்த கடற்படை சிப்பாய் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது....
இலங்கை தொலைக்காட்சிகளில் சனல்-4 ஊடகத்தினால் இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படம் ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டுமென ஊடகவியலாளர் கலெம் மக்ரே கோரியுள்ளார். கூடிய விரைவில் நோ பயர் ஸோன் ஆவணப்படத்தை காட்சிப்படுத்துமாறு கோரியுள்ளார். ஆவணப்படம் தொடர்பில் மெக்ஸ்வெல் பரணகம அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு மட்டுமன்றி...
யாழ்.மாவட்டத்தில் வசிப்பவர்களில் 13.1 சதவீதமானவர்களிடம் சொந்தமாக கணினிகள் உள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் தற்போது 1 இலட்சத்து 90,150 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 17,722 பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் தனிநபர்களிடத்தில் 13.1 சதவீதத்தினரிடம் கணினிகள் உள்ளன. இதேவேளை, கம்பனிகள் உள்ளடங்களாக 13.8 சதவீத இணைய இணைப்புக்கள் உள்ளன. 9.1 சதவீதத்தினர்...
ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றாமல் தனிச் சிங்கள நாட்டை உருவாக்க நினைத்தால் தமிழர் தேசத்தில் தமிழீழம் என்ற தனி இராஜ்ஜியம் உருவாக அது வழிசமைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு இன்று வியாழக்கிழமை உரையாற்றிய போதே...
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் தாண்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்த மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் பாரதூரமானதாக அமைந்துள்ளன என்று அமைச்சரவை பிரதிப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "பரணமக ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை...
வெள்ளைக் கொடி விவகாரம் பொய் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனின் மனைவி சசிரேகா சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகைளை மேற்கொள்ளும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி திவயின இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இராணுவத்தினரிடம் சரணடைந்த எவரும் வெள்ளைக் கொடியுடன் வரவில்லை என...
60 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கொடிகாமம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கலால் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் வசமிருந்து 30 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இந்தியாவின் - இராமேஸ்வரம் கடல் மார்க்கமாக இவற்றை நாட்டுக்குள் கொண்டுவந்து வல்வெட்டித்துறை...
வடமாகாண மரநடுகை மாதமான கார்த்திகை மாதம் முதலாம் திகதி தொடங்கி முப்பதாம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் ஐந்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்குத் திட்டம் இடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவித்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அவரது அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அதன்போதே இதனைத்...
இந்திய மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும்விட அதிக அளவு அதிகாரங்களை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குவதற்கேற்ற வகையில்தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் பிரேரிக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த முன்னாள் இந்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமாகிய ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற் கொண்டு கொழும்புக்கு வருகை தந்திருந்த சிதம்பரம், நேற்று புதனன்று...
தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று மண்ணுக்குள் புதையுண்டுபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தனது தோட்டத்தில் அமைந்திருந்த கிணறு மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 40 அடி...
போர்க்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள், இறுதிப் போரின்போது நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் என்பன தொடர்பில் விசாரணை செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள கலப்பு நீதிமன்ற விசாரணையை நாம் வரவேற்கிறோம். என்று தமிழ்த்...
அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அனுமதிப் பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச் சென்றதாக, சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய லொறியை விடுவிக்கவே இவர் இவ்வாறு இலஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளார். இதன்படி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு சந்தேகபர் 6000 ரூபா இலஞ்சமாக கொடுக்க...
இந்திய அமைதிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 28ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை 10 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்திய அமைதிப்படையினர் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் உட்புகுந்து மேற்கொண்ட துப்பாக்கி...
Loading posts...
All posts loaded
No more posts
