இந்து மயானத்தில் ஆயுதங்கள் !! – அகழ்வுப்பணியில் மானிப்பாய் பொலிஸார்

வவுனியா, பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வவுனியா பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் அகழ்வுப்பணியை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வவுனியா நீதிவான் வி.இராமக்கமலனின் அனுமதியைப் பெற்று, வவுனியா பொலிஸாரின் உதவியுடன், குறித்த மயானத்தில் அகழ்வுப்பணிகள், இன்று புதன்கிழமை (04) இடம்பெற்று வருகின்றன.

இந்து மயானத்தில் 3 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தொல்பொருள் ஆய்வுத்திணைக்கள அதிகாரிகள், கிராம சேவகர், சமாதான நீதிவான் முன்னிலையில் இவ் அகழ்வுப்பணிகள் இடமபெற்று வருகின்றன.

Related Posts