- Monday
- April 27th, 2026
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணி விநியோகம் செய்வதற்கு யாழ்ப்பாண நகரத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள பல கடைகளில் சீருடை துணி இருப்பில் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்து, சீருடைத்து துணிக்குப் பதிலாக வவுச்சர் வழங்கும் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள வவுச்சரை, தங்கள் பிரதேசத்திள் சீருடை துணி விநியோகம்...
யுவதியொருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளதாக மிரட்டி 30 ஆயிரம் ரூபாய் பணம் கோரிய சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன், அதற்கு உடந்தையாகவிருந்த 17 வயது பாடசாலை மாணவனை 1 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்தார். தென்மராட்சியைச்...
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற வடக்கு பகுதிகளில் சுமார் 200,000 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக உலகில் மிகப்பெரிய கண்ணிவெடி அகற்றும் நிறுவனம், நேற்று தெரிவித்துள்ளது. அத்துடன், 2020ஆம் ஆண்டளவில் இலங்கையை வெடிபொருட்கள் அற்ற நாடாக மாற்றுதே தமது இலக்கு எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. "இலங்கையை முற்று முழுதாக கண்ணிவெடிகள் அற்ற நாடாக 2020ஆண்டளவில் மாற்றுவதே எமது இலக்கு"...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்திய முனையத்தை திறந்து வைத்தார். யாழ். மாநகர ஆணையாளரர் பொ.வாகீசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்கார, யாழ். இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், வடக்கு...
தென்னிந்தியாவில் வழக்கத்தை விட அளவுக்கு அதிகமாக பொழியும் மழை பெப்ரவரி மாதம் வரை தொட வாய்ப்புள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவ நிலை மாற்றம் மற்றும் எல்-நினோ குறித்து ஐ.நா. நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தென்னிந்தியாவில் வடகிழக்குப் பருவ மழை அதிகமாகப் பொழிய எல்-நினோ...
பயங்கரவாதச் சட்டத்தை நீக்குவதாக சர்வதேசத்திடம் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. எனவே அச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை எவ்வாறு துரிதப்படுத்த முடியும் இவ்வாறு கேள்வியெழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஐ.நா மனித...
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் 200பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 14வது அமர்வு நேற்று நடைபெற்றது. அதேவேளை அதன் 2ம் நாள் அமர்வு இன்றைய தினம் மீண்டும் இடம்பெறவுள்ளது. நேற்றைய அமர்வில் நல்லூர்...
வவுனியாவில் சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஆற்றிய உரையும் படங்களும்
உயர் தரத்தில் விஞ்ஞானம் தவிர்ந்த ஏனைய துறையில் கல்வி கற்றவர்களையும் மருத்துவ துறைக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த இதனை நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் முன்வைத்த வாய் மூல கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது வரைக்காலமும்,...
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் இணைத்தலைவர்களாக மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகிய மூவருமே இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடமாகாண முதலமைச்சர்...
இலங்கையில் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சென்னை டாக்ஸி சாரதி இந்தியாவில் உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பூமிதுரை எனப்படும் டாக்ஸி சாரதியின் சடலம் அண்மையில் இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த சடலத்துடன் காணப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், 41 வயதான குறித்த சாரதி உயிருடன் இருப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....
2015ஆம் ஆண்டுக்கான ஆணழகருக்கான போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆனந்த கல்லூரி குலரத்ன மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 68ஆவது தடவையாக நடைபெறவுள்ள ஆணழகர் போட்டிகளுக்கு இம்முறை மொத்தம் 140 வீரர்கள் பங்குபற்றகின்றார்கள். வடக்கிலிருந்து 12 வீரர்கள் பங்குபற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மிஸ்டர் ஸ்ரீலங்கா என்ற பெயரில் நடத்தப்படும் ஆணழகருக்கான போட்டிகள் குறித்து உத்தியோ கப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு...
முப்பது வருடகால யுத்தக் காலத்திலும் வட பகுதியில் தடுப்பூசி ஏற்றுவதற்காக பிரபாகரன் இரண்டு தினங்கள் அனுமதி வழங்கியிருந்தார். இதனால் இன்று வடக்கில் தடுப்பூசி வழங்குவது நூற்றுக்கு நூறுவீதம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதென சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரச வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே தனியார் துறையினர் ஊடுருவ...
கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்துவரும் அதிக மழையுடனான காலநிலை இம்மாதம் முழுவதும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எல் நினோ நிலைமை காரணமாக ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிக மழை வீழ்ச்சி ஏற்படும் என முன்னர் எதிர்வுகூறப்பட்டிருந்த்தாக திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஆர். ஜயசேகர குறிப்பிட்டார். இம்மாத நடுப்பகுதியிலிருந்து மழை வீழ்ச்சி...
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதியின் ஆணைக்குழு விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இன்றைய தினம் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் இருந்து கிடைக்கப்பெற்ற 235 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் யாழ்.மாவட்ட செயலகத்தில் 8.30 மணியளவில் ஆரம்பமாகி 5.30 மணி வரை இடம்பெறவுள்ளது. மேலும் யாழ்.மாவட்டத்தின் 9 பிரதேச செயலாளர் பிரிவில் இருந்தும் காணாமல்...
நல்லாட்சி அரசாங்கம் எனக்கூறும் புதிய அரசாங்கமும் வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்து ஒத்துழைத்து செயற்படாமல், முன்னைய அரசாங்கம் போன்று தனித்து முடிவெடுத்து வடமாகாணத்தில் செயற்றிட்டங்களை செய்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடிகயில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது. இதன்போது, வடமாகாண...
தனியார்துறை ஊழியர்களுக்கு, சம்பள உயர்வைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டுவரவுள்ளதாக தொழில் உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, நேற்று வியாழக்கிழமை(10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு- செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இதற்கான சட்டமூலம், ஏற்கெனவே வரையப்பட்டுள்ளது என்றும் கூறினார். தனியார்துறை ஊழியருக்கான சம்பளத்தை 2,500 ரூபாயினால் உயர்த்துமாறு அரசாங்கம் கேட்டதற்கு,...
யாழ்ப்பாணம் பலாலியில் இராணுவத்தின் வசமுள்ள ஒரு தொகைக் காணிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். 'சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவோம்' என்ற தொனிப்பொருளில் நேற்று வியாழக்கிழமை மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும்...
"வடக்கில் அடையாளம் காணமுடியாத புலனாய்வுப் பிரிவினர்களால் மக்களின் உளநலம் பாதிக்கப்படுகின்றது'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார். "முள்ளிவாய்க்காலில் கொலைகளைக் கண்டு சடலங்கள் மீதேறி தப்பித்த தமிழ் மக்கள் இன்று உளநல பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே, வடபகுதிக்குத் தேவையான உளநல வைத்தியர்களை அரசு பெற்றுக்கொடுக்கவேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்....
"சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் தாமதமின்றி உடனே விடுவிப்பது அரசின் தலையாய கடமையாகும். அவ்வாறு விடுவித்தால்தான் எமது நாட்டில் எமது ஆட்சியாளர்களிடையே மனித உரிமையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கம் உண்டென்று உணரக் கூடியதாக இருக்கும்." - இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அமர்வு, சர்வதேச மனித...
Loading posts...
All posts loaded
No more posts
