Ad Widget

இன்று காலநிலை எப்படி இருக்கும்?

கடந்த சில நாட்களாக வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தற்போது நாட்டினை விட்டு விலகி வருவதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நாட்டின் வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியம் நிலவலாம் எனவும் வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் மழை பெய்வதுடன் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இடி, மின்னலில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களிடம் வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுஇவ்வாறு இருக்க அதிக மழையுடனான காலநிலை காரணமாக சில நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related Posts