Ad Widget

பேக்­கரி தயா­ரிப்­புக்­களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

வரவு – செல­வுத்­ திட்­டத்தில் பேக்­கரி தொழிற்­று­றைக்கு வரி அற­வீடு அதி­க­ரித்­துள்­ளதோடு எதிர்­பார்க்கப்­பட்ட நிவா­ரணம் வழங்­கப்­ப­ட­வில்லை. இதனால் எதிர்­கா­லத்தில் பாண் உள்ளிட்ட பேக்­கரி தயா­ரிப்­புக்­களின் விலை அதி­க­ரிக்கும் சாத்­தி­ய­முள்­ளது என அகில இலங்கை பேக்­கரி உரி­மை­யா­ளர்கள் சங்கம் தெரி­வித்­துள்­ளது.

பேக்­கரி உரி­மை­யா­ளர்­களால் 2 சத­வீ­த­மாக செலுத்­தப்­ப­டு­கின்ற தேசத்தை கட்­டி­யெ­ழுப்பும் வரி­யா­னது 4 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே எதிர்­கா­லத்தில் தமது தொழிற்­து­றையை பாது­காக்கும் முக­மாக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது என பேக்­கரி உரி­மை­யா­ளர்கள் சங்­கத்தின் தலைவர் என்.கே.ஜய­வர்த்­தன தெரி­வித்­துள்ளார்.

இம்­முறை வரவு செல­வுத்­திட்­டத்தின் மூலம் பேக்­கரி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண நிலை கார­ண­மாக பாண் இறாத்­த­லொன்­றுக்கு 4 சத­வீ­தமும் ஏனைய பேக்­கரி தயா­ரிப்­புக்­க­ளுக்கு 16 சத­வீ­தமும் வரி செலுத்த வேண்டி ஏற்­பட்­டுள்­ளது.

இவற்றைக் கருத்திற் கொண்டு தேசத்தை கட்­டி­யெ­ழுப்பும் வரி­யினை குறைக்க அர­சாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் விலை அதிகரிப்பை தவிர வேறு வழியில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts